Saturday, 16 April 2016

பூக்காரி

பூக்காரி
'பூ வேணுமா, பூ?' குரல் உயர்ந்து கூவினாள்.
தன் தலைமேல் பொதி போன்ற பூத்தட்டு கனத்தது.
'எனக்கு ஒரு முழம் பூ கொடுங்க,' வேண்டினாள் ஒரு பெண்மனி.
'லக்ஷ்மியாட்டமிருக்க, இந்தா, பூவை தலைல வைச்சுக்க'.
கை மாறியது பூ.
பூக்காரிக்கு தன் தலைச் சுமை பூவில் ஒரு முழம் குறைந்ததில்தான் என்ன மகிழ்ச்சி.
தன் தலையில் உள்ள பூத்தட்டு ஒரு சுமையோ?  பூச்சுமை குறையக் குறையத்தான் பூக்காரிக்கு லக்ஷ்மியின் அருள் கிடைக்குமோ!
'பூ வேணுமா, பூ?' குரல் உயர்ந்து கூவிக் கொண்டே தன் வழி நடந்தாள் பூக்காரி..

என்ன விந்தையடா இவ்வுலகம்.

2 comments:

  1. அழகான ஆரம்பம் சார்.லட்சுமியே வந்து பூச்சரம் கொடுத்த மாதிரி,லட்சுமி கடாட்சம் பூரணமாக உண்டு .இதில்ஏ. ஐயமில்லை.முடிவு என்னவோ

    ReplyDelete
  2. அழகான ஆரம்பம் சார்.லட்சுமியே வந்து பூச்சரம் கொடுத்த மாதிரி,லட்சுமி கடாட்சம் பூரணமாக உண்டு .இதில்ஏ. ஐயமில்லை.முடிவு என்னவோ

    ReplyDelete