பல்லவி:
அம்மா
பள்ளி போகும் கண்ணே நீ இனி
போக
வேண்டாம் கண்ணே
அனுபல்லவி:
கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே
சரணம்:
அம்மா
பூஸ்ட் பாலு கண்ணே, உனக்கு
கை நிறைய ஓரியோவும்
கண்ணே; ஆனா
வெளியே போக வேண்டாம் கண்ணே
கண்ணன்:
பாலு
வேண்டாம்; ஓரியோ வேண்டாம்,
வெளியே போக வேணும், தாயே
போக
வேணும் தாயே; விளையாட போக வேணும், தாயே
அம்மா
ஊரு நதிக் கரையில் கள்வன் பயம் உண்டு
வந்துனை பிடித்தால் கலங்கிடுவாய் கண்ணே
வெளியே போக வேண்டாம் கண்ணே
கண்ணன்:
கள்ளணுன்டோ? கண்டதுண்டோ தாயே?
கள்வன் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் ஆக்கிடுவேன் தாயே
போக வேணும் தாயே; விளையாட
போக வேணும், தாயே
அம்மா
கோவிட் கள்ளன் பிடித்து விட்டான் இவ்வுலகை கண்ணே
கோவிலில்லை, பூஜையில்லை
சென்று வணங்க கண்ணே
மாஸ்க் மட்டும் முக்கியம்,
தூர தூரமும் முக்கியம்
வெளியே போக வேண்டாம் கண்ணே
கண்ணன்:
கோவர்த்தன கிரியில் கோர காட்டு மிருகமெல்லாம் ஜெயித்திடுவேன் தாயே
போக வேணும் தாயே – விளையாட போக வேணும், தாயே
அம்மா
நீ கலியுக கண்ணனில்லை,
கண்ணே; நீ கோவிட் உலக கண்ணனடா
கண்ணே
ஐ-பாட் தரேன் கண்ணே, டீவி
டைம் தரேன் கண்ணே
வெளியே போக வேண்டாம் கண்ணே
கண்ணன்:
பள்ளி வேண்டாம்; கோவில்
வேண்டாம்,
பாலு
வேண்டாம்; ஓரியோ வேண்டாம்
ஐ-பாட் போதும், டீவி போதும்
தாயே
வெளியே போக மாட்டேன் தாயே
அம்மா
என் கண்ணன் நல்ல கண்ணன்தானே
எனக்கும் டீவி நேரம், மொபைல் நேரம் கிடைச்சுடுத்து கண்ணே
கோவிட்டுக்குதான் தாங்க்ஸ் சொல்லனும் கண்ணே!
கொமசா