Thursday, 10 September 2020

துணி தோய்க்க கல்லிருக்க


துணி தோய்க்க கல்லிருக்க

தோய்க்க எந்திரம் வந்ததே

மனிதன் வெறுக்க கல்லு கல்லு ஆனதே!

 

மாவரைக்க கல்லிருக்க

மாவரைக்கும் எந்திரம் வந்ததே

மனிதன் வெறுக்க கல்லு கல்லு ஆனதே!

 

மாட்டு கொட்டகை வீட்டில் இருக்க

மாட்டு வீடு மாடி வீடு ஆனதே

மனிதன் வெறுக்க மாட்டு வீடு ரோடு ஆனதே!

 

மாட்டு பால் மறந்து போக

புட்டி பால் குடிக்கும் நிலை வந்ததே

மனிதன் வெறுக்க மாட்டு நினைவும் மறந்ததே!

 

வீட்டு உணவு சுகமா இருக்க

உணவகம் போய் உடல் பாழானதே

மனிதன் வெறுக்க வீட்டு உணவு விஷமானதே!

 

மனிதன் வாழ்வு போய் சாவு சிரிக்க!

மனிதன் அன்று வீட்டிலே

மனிதன் இன்று சேற்றிலே

 

விஷத்தில் மிக்க கோவிட் சுத்துதே!

புனித ஈசனை  மறந்து போன மனிதனே

உன்னை கோவிட் வந்து ஆட்டி அடக்கி விட்டதே!

 

மூளையற்ற மனிதனே

வந்த வழியை பாரடா

பசுவை போல வாழுடா!

 

வாழும் வழியை தேடடா

மூளையற்ற மனிதனே

வாழும் வழியை தேடடா!

 

கோமச்சா

  

No comments:

Post a Comment