Saturday 19 December 2015

Sixteen Minutes



16th December, 2012-Nirbaya’s  death, three years have gone since then. One among the six  people responsible for her killing  has already committed suicide. Four  people have been given the death sentence. As  one of them was  a 'minor',  he was given a three year jail term that ends on 20 December, 2015.

He should not be released.  He should also be given the death penalty or at least the  life imprisonment -   fierce arguments were made almost every day in  the country's major  TV  channels. In addition,  "Facebook", "Twitter" were also reviewing the death of Nirbaya. But, none  was not ready to talk about  the minor boy in a way that would consider some relief for him.

It is no exaggeration if  we say that Nirbaya's  death has influenced the minds of  large section of the population  and engaged their attention for a long time too.   

I just googled  and found that  after the incident, for  nearly three months, intense debates, experts' analysis and discussions were  held  in almost all the  main TV channels. Then,  a long pause.   After the first year, discussions, debates about Nirbaya and juvenile crimes resumed  and continued for  two to three days. Then another pause.  Similarly,  at the end of the second year,  similar debates and  the same pause  again. Now, after the third year, the Minor boy who killed her completed his term of three years of imprisonment and will be released from jail on  20th December, 2015.  This time,  more serious discussions and debates  started well before the deadline date (or lifeline for the minor boy) and it has caught the attention of many. Arnab Goswamis, Sardesais of  popular TV  channels were discussing the issue more intensely than ever before, interviewing the parents of Nirbaya, passing their own value judgements and comments on the issue. Nirbaya's parents too wanted the young man(now a major), should also be given the same punishment as other three and not allowed to come out of the jail. In this case, the young boy's parents did not have any opportunity  to talk their mind out to the public.

According to the information on juvenile crime in the country published in a daily,  in  the year 2014, among other reasons, cases of rape and sexual attack on women were reported to be  approximately 10.6% of the crimes by the minors on women, young and old. The punishment given to the guilty ranged from  forgiveness, warning and sending them to  rehabilitation centers.  So far, no juvenile crime attracted such attention as Nirbaya's death got.

If I say these things, please for a moment,  do not think that I  was giving my  approval for  such  gruesome acts. I just tried to imagine  the matter in a slightly alternate angle.

I share my imaginative thoughts with you.

What follows is  my own imagination only.

*********

20 December, 2015

The young man, Unmaatan (fictional name) was brought out of the  Tihar jail. His face covered with a soft cloth  so that it was not visible for  those outside, but he could see the people outside through it.  There was a  huge police force deployed and  moving around him.

Outside the prison, a large crowd of people were waiting eagerly to see him coming out.  A large number of them  were shouting slogans and showing placards seeking life imprisonment, if not death penalty for him.

Besides them, news reporters from major TV channels  were also waiting  with their video cameras ready for a live  coverage of the event.

Suddenly, from the crowd, a middle-aged man and woman came out shouting 'Unmaata'.  They tried to push themselves through the crowd and  rushed towards him. . The young man turned in the direction of the voice coming.

The people assembled there, the TV  journalists  were very much surprised with what they saw.  So far,  it  was unknown to the world outside - who was he,  what was his name and who were all his family members-  suddenly they saw the truth unfolding in front of them.  Watching them from a distance, Unmaatan called back loudly  "Mom, Dad'' and waved his hands towards them..

There was sudden silence for a few minutes. The people watching the event were awestruck by this unexpected turn of events.

Police officers did  not allow  the couple to go forward  and stopped them. Suddenly, both of them  fell at their feet and  begged to be allowed to talk with their son.  Police officers did not know what to do. Seeing this  commotion  from a distance a senior police officer  came there to the rescue of other policemen.  

He also told the  couple about his inability to allow them to  see or talk to their son.  They  repeated the same method which they adopted earlier and  fell on the feet  of the officer and   pleaded with him for  his permission to speak with their son  just for a few minutes. The officer was in a  dilemma.

He thought for awhile and said, "Well, only  a few minutes; I  will allow  you both to talk to your son. But, you should meet and talk to him only in our  presence".

They agreed and virtually ran towards their son.
.
Meeting Unmaatan,  they held his  hand firmly and began to cry and speak simultaneously. They rubbed his face with their hands.  He embraced them.
It was clear for all that he was also emotionally caught and started crying and conversing with. his parents.

The TV reporters were  inwardly very happy  as direct telecasting of such an event  would increase their 'TPR rating ".

Seconds changed to minutes. The  Police officer became  impatient.

"I just allowed some minutes of time for you to meet and talk to him. It is now fifteen minutes since I allowed you.  That is all.  Both of you leave",  he shouted at them and  ordered  them to move away immediately.

They pleaded, 'Sir, the last one minute, we will leave'.

 "They told him, Unmaata, today is  Sunday.  we know your favourite sweet  dish is  'milk keer'  and we have brought just for you, our dear son',  and  so saying  opened a flask and gave it to him to drink the keer from it.

'Is it!  thank you amma'. He picked up the flask from his mother and gulped the keer in one go .   'I will be back in a few months,"  he said  and moved away with the police officers.

Watching the couple quickly moving out of that place, some of the TV reporters rushed towards them and  began asking them various types of questions.  The couple did not respond to their call and ran towards the auto-rickshaw waiting outside.  In a matter of seconds  they vanished  from there.  From where did they come?  Where were they going from here?  Without giving any clue to these questions,  they just disappeared.

******

A flash back

One year before the Nirbaya incident.
.
A village in Bihar.

Unmaatan, in anger,  picked up a fight with his mother Maagee  and stormed out of the house, throwing the food plate out of the window.

He demanded a hundred rupees for his expenses. As she did not have the money to give him, he became furious and shouted at his mother and left it in a huff.

As  he has done like this a number of times in the past, his mother  Maagee  did  not  bother herself much with such action of her son and  ignored it.

In his childhood, Unmaatan was good at his  studies  and a loving child too.  Before leaving for school, he used  to come to his mother, holding her hands he would fondly say, 'Mom, please do not forget to take your medicines. Your health will be fine, do not worry'.  Such  gestures of Unmaatan  were very comforting for her.

On Sundays, she will  invariably prepare milk keer as it was one of his favourite dishes.  He was their only child. He was their only hope.

Raman Pandey, his father worked  as a  security guard  in a private firm. He worked more on night shifts as his duty demanded. Raman Pandey's income was just sufficient to meet the  expenses for the house and Unmaatan's  studies.  It was just enough for running their household. 

For the last one year, there was a perceptible change in the attitude of Unmaatan, the way he conducted himself with his parents, his rude behaviour with them. These caused quite a concern for the parents.  They could see that his  association with some of the boys in the area was the root cause of this unruly behaviour of Unmaatan.  So, they had almost decided  to move  out of the village and go to another.

***
.
'What, now it seemed to Maagee,  the time was going  pretty  slowly. Household chores were over quickly.  She felt as though  a cold wind was blowing through the house and, then  a heavy and  hot air was hitting hard alternately'.
.
Maagee sat on the floor  and  munched with varied  thoughts. There was a weariness on her face.

The village was slowly slipping into the  night.

Now, it is  nine in the night.

Unmaatan  was yet to  return  home.

In the last count,  he talked over the mobile around a quarter to seven o'clock. After that, the network was not available. Again and again, same  answer was coming whenever she tried to talk to him over the mobile.

Raman Pande  had gone to his night duty.  

As the time trickled, she  was a little scared. She went  to the bus stop nearby and waited for him. There was no sign of his returning that night.  It increased her concern.
She phoned up Raman and expressed her  concern. He ignored it as such incidents had taken place before also with Unmaatan not returning home till late night. He just comforted  his wife  Maagee  and continued with his work.  She wanted to go to the nearest police station to enquire about him. But for some reason, she  changed her mind and came back home.

It was past  eleven o'clock in the night.

No news about Unmaatan. The night was her only companion.She did not know what to do. Again, she phoned her husband  and expressed her concern. He again excused himself and  inability to come immediately.

She was sleepless and feeling  fatigue and it  increased her concern.

Raman,usually will return around  eight in the morning the next day. That day, he returned early around  four o'clock itself.

Unmaatan did not return home yet. Whom to talk to?
.
A month later, they received a letter from  Unmaatan, saying that he has gone to Delhi and found a work for him there. They did not know what to do and  they resigned to the fate of having lost their only son.

***

Nowadays, for  Maagee and, Raman,  watching TV regularly was  the only entertainment - particularly watching serials and news from various channels.
.
On one such day, they watched the news of  the murder of Nirbaya.   They too, like others who saw the news, felt very sad for the brutal end of a young woman.

Suddenly, one day, two police officers came to their house, enquiring  about Unmaatan, their relationship with him.  For them, it seemed that his soul passed away from them. The police officers collected  copies of his  birth certificate and  information about his education and left.

From then on, the poor couple  reduced their movements  outside  their house.  The neighbours started  asking uncomfortable questions about Unmaatan.  The TV became  their sole companion. As they were watching the events on Nirbaya, they came to know the atrocities of the five murderers which included their son, Unmaatan. His gruesome role in the murder made them feel sick in the pit of their stomach. It was shocking first, then, a sense of shame engulfed them.

One day, they watched the news that Unmaatan was given just three years of imprisonment as he was still a minor by age. Others were given death penalty. They felt somewhat relieved on hearing this news.  After he was sent to jail, they went and met with him twice or thrice. But, on no occasion, he seemed to have expressed his regret.

Around the same time, parents of Nirbaya and others were expressing their anguish and strongly expressed that Unmaatan should be given at least the life imprisonment as he will be a great threat to the society if he was allowed to come out of the jail.

Watching such debates often and again and again,  made Maagee and Raman  feel that Unmaatan will not be able to lead his normal life even if he were to come out of the jail. They also felt very sad that heinous act of Unmaatan has ruined one good family.

The three years almost rolled by. Unmaatan was about to be released from the jai. Thoughts of his coming back haunted them and they felt that even if would like to get back home, the villagers may not allow him to come here and live with them. They started believing  that living lost its purpose.

Helplessly, they awaited the day of release of Unmaatan from the jail.

*****

Now, let us get back to the main story.

Unmaatan boarded the police van and it went away from there. The van  moved at its pace and the policemen seemed to relax for a while. He was taken to an unknown destination as directed by the superior officers.  About half an hour since the van left the jail premises, suddenly, Unmaatan felt uneasy and fell on the seat. His limbs were becoming cold. The policemen accompanied him panicked. They rushed him to a Government Hospital nearby. The doctor who examined him pronounced him dead  about half  before  he was brought to the hospital. The doctor also ordered an autopsy on the body of Unmaatan to ascertain the cause of death as required. The policemen were in a fix and feeling very nervous as they did not expect this development.

About five to six kilometers from there, Maagee and Raman were continuing their journey in the auto-rickshaw. They were talking to each other in a very hussed voice. But, abruptly, conversation stopped and the driver just turned around and saw that both of them were unconscious with their heads loosely falling back and forth. He felt the chill in his spine. He stopped the auto-rickshaw  and tried to wake them up. But, it was of no use. He rushed the auto-rickshaw to a hospital nearby. He summoned a doctor who initially refused to attend to the case but agreed reluctantly. After examining both of them, he informed the driver that both of them were already dead. He directed the driver to inform the  police  immediately and take further action.

The news of the death of Unmaatan and his parents spread like wild fire and the TV channels were flashing the news with whatever information they could get about the incident.

On watching this news, Nirbaya's parents too were shocked as they did not expect such an end would come to the young man and his family. They had hopes that Unmaatan would get extended term of stay in the jail; but, they did not expect that his parents who were innocent would also end their lives.

The TV channels started with a new vigour  with  discussions by experts, debates, survey analysis and  in a variety of ways about the death of Unmaatan,

The politicians though felt sick of this development moved swiftly to attend to their other important work in the Parliament, keeping aside for the time being, the larger issue of dealing with the subject on atrocities on women, juvenile crime and other related matters.

******


பதினாறு நிமிடங்கள்




நிர்பயா மரணம் அடைந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. அவளைக் கொலைக்குக் காரணமான ஆறு பேர்களில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். நால்வருக்கு தூக்கு தண்டனை அளிக்கப் பட்டுள்ளது. ஒருவன் வயது ரீதியாக அப்போது ஒரு 'மைனர்'. ஆகவே, அவனுக்கு அளிக்கப் பட்ட மூன்று கால சிறை தண்டனை டிசம்பர் 20ஆம் தேதி முடிவடைகிறது.
அவனுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது, அவனுக்கும் தூக்கு அல்லது குறைந்த பட்சமாக ஆயுள் தண்டனையாவது கொடுக்க வேண்டும் என்று வாதங்கள் தினந்தோறும் நாட்டின் முக்கிய டீ.வீ சானல்களில் ஒளி பரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதைத்தவிர, 'ஃபேஸ்புக்', 'ட்வீட்டர்' என்ற வலைத்தலங்களும் இவ்விஷயத்தை விமர்சித்த வண்ணமிருந்தன. ஒருவராவது, அந்த மைனர் இளைஞனின் பக்கம் பேசத் தயாராகவில்லை. அவ்வளவு தூரம் நிர்பயா மரணம் மக்களின் மத்தியில் பேசப்படும் செய்தியாக இந்த மூன்று ஆண்டுகளும் இருந்து வந்துள்ளதென்றால் அது மிகையாகாது.

நான் 'கூகுல்' செய்து பார்த்ததில், முதல் வருடம், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை இதைப் பற்றி நாட்டின் முக்கிய டீ.வீ சானல்களில் தீவிர விவாதம் நடை பெற்றது. பிறகு, ஒரே அமைதி. திரும்பவும் முதல் வருடம் முடிந்தவுடன், இரண்டு மூன்று நாட்களுக்கு அதைப் பற்றி விவாதம். திரும்பவும் அமைதி. அதே போன்று,  இரண்டாம் வருடம் முடிந்த போதும், அவ்வாறே விவாதங்கள். திரும்பவும் அமைதி. இப்போது, மூன்றாம் ஆண்டு முடிந்து, கொலை செய்த ஒருவரில் 'மைனர்' என்ற காரணத்தினால், சட்ட ரீதியாக காவலில் வைக்கமுடியாத கட்டத்தில், இந்த செய்தி, நாடு முழுவதும் திரும்பவும் சூடு பிடித்துப் பேசப்படுகிறது. ஆங்கில டீ.வீ சானல்களின் அர்னாப் கோஸ்வாமியென்ன, ஸர்தேஸாயென்ன, இவ்விஷயத்தை அலசு அலசென்று அலசித் தீர்த்துக் கொண்டிருந்தனர். நிர்பயாவின் பெற்றோர்களும், தன் பெண்ணுக்கு நடந்த இழிச் சம்பவத்திற்கு, மைனர் இளைஞனுக்கும் மரண தண்டனையளிக்க வேண்டுமென்று மிகத் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில், அந்த இளைஞனின் பெற்றோரைப் பற்றி ஒரு விவாதமும் இல்லை.

ஒரு தினசரி,  சிறார் குற்றம் (juvenile crime) பற்றி தரும் தகவல் படி, 2014ம் வருடத்தில், கிட்டத்தட்ட 10.6% வழக்குகள் கற்பழிப்பு மற்றும் பெண்களை அவமானப்படுத்திய காரணங்களுக்காக இருந்தன. அவைகளைச் செய்த சிறுவர்களுக்குக் கொடுத்த தண்டனைகள், மன்னிப்பு, எச்சரிக்கை, சில காலங்கள் மறுவாழ்வு மையங்களில் தங்குதல் போன்றுதான் இருந்தன என்று கூறியுள்ளது.  ஆகவே, இதுவரை இவ்விதமான குற்றங்களைச் செய்துவிட்டு, வெளியே வந்துவிட்ட இளைஞர்களைப் பற்றி இப்படி மிகத் தீவிரமான விவாதம் நடந்ததா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

 
நான் இப்படியெல்லாம் கூறுவதால், அவ்விளைஞனின் இக்கொடூரமான  செயலுக்கு ஒப்புதல் தருவதாக நினைக்க வேண்டாம். நான் இவ்விஷயத்தை சற்று மாற்றுக் கோணத்தில் கற்பனை செய்தேன். உங்களுடன்       பகிர்ந்து கொள்கிறேன்.
 
இது என் சொந்த கற்பனைதான். 
 
*********
 
20 டிசம்பர், 2015
 
இளைஞன், உன்மாதன் (கற்பனை பெயர்தான்) திஹார் சிறையிலிருந்து மிக பாதுகாப்புடன் வெளியே கொண்டு வரப்பட்டான். அவன் முகம் வெளியே இருப்பவர்களுக்குத் தெரியாத வண்ணமும், ஆனால், அவனால் மற்றவர்களைப் பார்க்க முடியும் வண்ணமும் ஒரு துணியால் மூடியிருந்தது.  அவனைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு இருந்தது.

சிறையின் வெளியில், ஒரு பெரிய மக்கள் கூட்டமே அவன் வெளியே வருவதை ஆவலுடன் பார்க்கக் காத்திருந்தன. நிறைய மனிதர்கள், அவனை வெளியே விடக்கூடாது என்றும், ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டுமென்றும் குரல் எழுப்பிக் கொண்டுமிருந்தனர். அவர்களைத் தவிர, நாட்டின் முக்கிய டீ.வீ சானல்களிலிருந்தும் தங்கள் தங்கள் வீடியோ காமராக்களை தயாராக வைத்துக் கொண்டும் காத்திருந்தனர்.
 
அப்போது, கூட்டத்திலிருந்து, ஒரு நடுத்தர வயதுள்ள ஆணும், பெண்ணும் திடீரென்று வெளி வந்து, உரத்த குரலில், 'உன்மாதா' என்று கத்திக் கொண்டே அவனை நோக்கி விரைந்தனர். குரல் வந்த திசையில் அந்த இளைஞனும் திரும்பினான். அங்கு கூடியிருந்த மக்களுக்கும், டீ.வீ பத்திரிகையாளர்களுக்கும் இதைப் பார்த்தவுடன் மிக ஆச்சரியத்தைத் தந்தது. இதுவரை, உலகத்திற்கே தெரியாத உண்மை- அவ்விளைஞன் யார், அவன் பெயர் என்ன, அவன் குடும்பத்தார்கள் யார் யார் என்ற உண்மை- திடீரென்று தெரியவந்து விட்டதாக எண்ணினர். அவ்விளைஞனும், அவ்விருவரையும் பார்த்து, 'அம்மா, அப்பா'' என்று உரக்க பதில் குரல் கொடுத்தான். ஒரு சில நிமிடங்கள் அங்கே ஒரு எதிர்பாராத அமைதி நிலவியது. 
 
அவ்விருவர்களையும் காவல் அதிகாரிகள் முன்னேற விடாது, தடுத்து நிறுத்தினர். அவ்விருவர்களும், தடாலென்று, அவர்களின் காலில் விழுந்து வணங்கினர். அவர்களை தங்கள் மகனுடன் சற்று பேச அனுமதிக்குமாறு கெஞ்சினர். காவல் அதிகாரிகளுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. இதைப் பார்த்துவிட்டு தொலைவிலிருந்து ஒரு மேலதிகாரி வேகமாகவே ஒடி வந்தார். அந்த தம்பதிகளைப் பார்த்து, அவர்களை அவ்விளஞனைப் பார்க்க அனுமதியளிக்க முடியாதென்று கூறினார். அவர்கள், திரும்பவும் அந்த மேலதிகாரி கால்களில் விழுந்து அவர்களை ஒரு சில நிமிடங்களே தங்கள் மகனுடன் பேச அனுமதி அளிக்குமாறு கெஞ்சினார்கள். அந்த அதிகாரிக்கும் ஒரு தர்ம சங்கட நிலையாகி விட்டது.

'சரி, உங்களிருவருக்கும் சில நிமிடங்களே கொடுப்பேன். எங்கள் முன்னிலையில்தான் சந்திக்க வேண்டும், பேசவும் வேண்டும்,' என்று கூறி, அவர்களைத்தானே அழைத்துச் சென்று, அவ்விளைஞனின் முன்னிலையில் நிறுத்தினார்.

அவர்கள் இருவரும் அந்த அதிகாரி சொன்னதற்கு சம்மதித்து, தங்கள் மகன் இருந்த திசையை நோக்கி அவருடன் துரிதமாக நடக்கத் தொடங்கினர்.

மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு, அவ்விருவரும் அழுது கொண்டே அவனிடம் பேசத்தொடங்கினர். அவன் முகத்தைத் தடவிக் கொடுத்தனர். அவனும், அவ்விருவரையும் அணைத்துக் கொண்டான். அவனும் அழுகிறான் என்று அங்கு நடக்கும் சம்பவத்திலிருந்து எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தது. டீ.வீ பத்திரிகையாளர்களுக்கு உள்ளூர மிக மகிழ்ச்சிதான். இது போன்ற சம்பவம், நேரிடை காட்சியாக ஒளி பரப்பப் படுவதால் அவர்களின் 'டி.ஆர்.பி ரேடிங்க்' மிக அதிகமாகிவிடும் என்று எண்ணி மிக மகிழ்ந்தார்கள்.

மகனும், பெற்றோரும் ஒருமித்து இருக்கும் காட்சி, முதன் முதலாக நேரடி ஒளிபரப்பாகிக் கொன்டிருந்தது.

நொடிகள், வினாடிகளாயின. காவல் மேலதிகாரி, பொறுமையிழந்தார்.
'சில நிமிடங்களென்று கூறி, பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டன. அவ்வளவுதான். நீங்கள் கிளம்புங்கள்,'  என்று கூறி, அவர்களின் கைகளைப் பற்றி அவ்விடத்திலிருந்து உடனே விலகுமாறு உத்தரவிட்டார்.

அவர்கள், 'ஐயா, கடைசி ஒரே நிமிடம், நாங்கள் போய்விடுகிறோம்,' என்று கூறிவிட்டு, அவனிடம், 'டேய், இன்று, ஞாயிற்றுக்கிழமை. உனக்குப் பிடிக்குமென்று, பால் பாயாசம் கொண்டு வந்திருக்கிறோம். அதை இப்போதே குடித்து விடு என்று கூறி, ஒரு ஃப்ளாஸ்கிலிருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாயசயத்தை அவனிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்கள். அவனும், மிக ஆர்வத்துடன், அந்த ஃப்ளாஸ்கிலிருந்து பாயசத்தைக் குடித்துவிட்டு, அவர்களை திரும்பவும் ஒரு முறை அன்புடன் தழுவிக்கொண்டான். பிறகு, ஃப்ளாஸ்கை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, 'சீக்கிரமே, திரும்பி வந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, காவல் அதிகாரிகளுடன் விரைந்தான்.

பார்க்க வந்த கூட்டத்திற்கும். டீ.வீ பத்திரிகையாளர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி. சில டீ.வீ பத்திரிகையாளர்கள் அந்த தம்பதியை நோக்கி விரைந்து வந்து அவர்களிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். அவ்விருவரும், தாங்கள் ஒருவரிடமும் பேசத் தயாராக வரவில்லை என்று கூறிவிட்டு, அங்கிருந்து விரைந்தனர். வெளியே காத்திருந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து வினாடியாக மறைந்தனர். சில டீ.வீ பத்திரிகையாளர்கள் அவர்களைத் தொடர்ந்து சென்றனர். ஆனால், ஒரு பயனுமில்லாது, திரும்பி வந்து விட்டனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எங்கே போகிறார்கள்? என்று புரியுமுன்மே, அவர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.
******
ஒரு ஃப்லாஷ் பேக்.

நிர்பயா சம்பவத்திற்கு ஒரு வருடம் முன்பு ஒரு நாள்.

பீஹார் மாநிலத்தில் ஒரு கிராமம்.

உன்மாதன், தன் அம்மா, மாகியிடம் சண்டைப் போட்டுக்கொண்டு கோபம் உச்சியை அடைய, கையில் இருந்த சாப்பாட்டுத் தட்டை வீசியெறிந்து வெளியேறினான்.

அவன் செலவிற்கு, ரூபாய் நூறு கேட்டான். கையில் பணமில்லையென்று, அவன் அம்மா சொல்ல, கோபம் கொண்டு அவன் வீட்டை விட்டுப் போனான்.

இப்படி அவன் அடிக்கடி நடந்து கொள்வதால், இன்றும், அவன் கோபப்பட்டுக்கொண்டு வெளியே சென்றதைப் பற்றி அவர்கள் ஒன்றும் கவலையடையவில்லை.  அவர்களுக்கு இது மிகச் சாதரண நிகழ்ச்சியாகத்தான் இருந்தது.

சிறு வயதில், உன்மாதன் அன்புடனும் படிப்பில் ஆவலுடனும்தான் இருந்தான்.  பள்ளிக்குக் கிளம்பும் முன்னும், அவன் அம்மாவினருகில் வந்து, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, 'அம்மா, மருந்தைச் சாப்பிட மறந்துடாதே. இன்னும் மூன்று கீமீயோதான் பாக்கியுள்ளது. அதற்குப் பிறகு உன் உடம்பு சரியாகிவிடும், கவலைப்படாதே, என்று ஆறுதல் கூற மறக்கமாட்டான்.

அவளும், ஞாயிற்றுக் கிழமை தவறாது, அவனுக்குப் பிடிக்குமென்று, பால் பாயாசம் செய்து கொடுப்பாள்.  பால் பாயசம் இருந்தால், அன்று மற்ற உணவு வகைகள் இரண்டாம் பட்சம்தான். அவனும் அவர்களின் ஒரே பிள்ளை. அவர்களின் ஒரே நம்பிக்கை. 

ராமன் பான்டே, அவனின் அப்பா. ஒரு தனியார் தொழிலகத்தில் செக்யூரிட்டியாக வேலை. மாதத்தில் பல நாட்களுக்கு இரவு ட்யூடி பார்க்க வேண்டியிருந்தது.  ராமன் பான்டேயின் வருமானம் வீட்டு செலவிற்கு ஒதுக்கியது போக, உன்மாதனின் படிப்பு, மற்றும் இதர செலவிற்கும் போதும் போதாது போல் இருக்கும். இதற்கிடையில், அம்மா மாகியின் கான்ஸர் ட்ரீட்மெண்ட்க்கும் பணம் வேண்டியிருந்தது. இந்த நிலையில்  செலவை எவ்வளவு சிக்கனப் படுத்தமுடியுமோ அவ்வளவு முயன்று சிக்கனமாக வாழ்ந்தனர்.

கடந்த ஒரு வருடமாக, உன்மாதனின் போக்கு, அவர்களுக்குக் கவலையைக் கொடுத்தது. நண்பர்கள் சகவாசம் சரியில்லை. அதனால், அவர்கள் அக்கிராமத்தை விட்டே சென்று விடலாமென்று தீர்மானித்திருந்தனர்.

அன்று, உன்மாதன் கோபம் கொண்டு வெளியே சென்றபின், மாகி, அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை.

'என்ன, இன்று நேரம் மிக மெதுவாகவே போகிறது போலுள்ளது. வீட்டு வேலைகள் துரிதமாகவே முடிந்து விட்டன, வீட்டில் ஒரு குளுமையான காற்று அடித்து நின்றது போலவும், பிறகு ஒரு கனமான வெப்பக் காற்று மாறி அடித்தது போலவும் இருந்தது'. 

மாகி எண்ணங்கள் சற்றுத் தடுமாற தரையில் அமர்ந்தாள். அவள் முகத்தில் ஒரு களைப்பு தெரிந்தது.

இரவு மெதுவாக அந்த கிராமத்தைத் தழுவியது.

இரவு ஒன்பது மணி.

இன்னும் உன்மாதன் வீடு திரும்பவில்லை.

கடைசியாக அவன் மொபையிலிலிருந்து ஏழு மணியளவில் ஒரு கால் வந்தது. அதன் பிறகு, நெட்வொர்க் இல்லை என்ற பதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.  ராமன் தன் இரவு வேலைக்குச் சென்றிருந்தான். மாகிக்கு இது போன்று சில நாட்கள் தன் மகன் நேரம் கழித்து வந்திருக்கிறானென்பதால், முதலில் அதிக கவலைப் படவில்லை. ஆனால், நேரம் செல்லச் செல்ல சற்று பயம் வந்தது. அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பிற்குச் சென்று அவன் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வரும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. கவலைதான் அதிகரித்தது.

ராமனுக்கு ஒரு போன் செய்து தன் கவலையைத் தெரிவித்தாள். அவனும் இதுபோல் சில சமயங்களில் ஆகிவுள்ளதால், மனைவி மாகிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தான். அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விசாரிக்க விரைந்தாள். ஆனால் ஏனோ, மனம் மாறி வீட்டிற்கே திரும்பி வந்து விட்டாள்.

இரவு மணி பதினொன்று.

உன்மாதனைப் பற்றி ஒரு செய்தியுமில்லை.  இரவுதான் அவளின் ஒரே துணையாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை.. திரும்பவும் கணவனுக்கு போன் செய்து தன் கவலையைத் தெரிவித்தாள். அவன் திரும்பவும் தன் மனைவிற்கு ஆறுதல் கூறிவிட்டு வேறொன்றும் செய்வதறியாது பேச்சைக் கட் செய்தான்.

இரவு முழுவதும் தூக்கமின்றி சோர்வு ஒரு புறம். அவள் உடம்பின் உபாதை மற்றொரு புறம். மாகிக்குக்  கவலைதான் அதிகரித்தது.
ராமன்,  அடுத்த நாள் காலை எட்டு மணிக்குப் பிறகு வருபவன், அன்று நான்கு மணிக்கே வந்து விட்டான்.

உன்மாதன் இன்னும் வீடு திரும்பவில்லை. அவனைப்பற்றி ஒரு தகவலும் இல்லை. யாரிடம் சொல்வது, என்ன சொல்வது என்று புரியாது, அவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.

ஒரு மாதம் கழித்து, அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது, உன்மாதன், டில்லி வந்துவிட்டேனென்றும், அங்கேயே வேலை தேடிக் கொண்டுவிட்டதாகவும் எழுதியிருந்தான். அவர்கள் என்ன செய்வதென்று புரியாது, தங்கள் விதியை நொந்து தன் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

இப்போதெல்லாம், மாகி மற்றும், ராமனுக்கு வீட்டு வேலைகள் முடிந்து ஒரே பொழுதுபோக்கு, டீ.வீயில் வரும் நாடகங்களைப் பார்ப்பதும், செய்திகளைப் பார்ப்பதுமாக ஆகிவிட்டது.

அப்படியிருக்கும் ஒரு நாள்தான், நிர்பயா கொலையைப்பற்றி டீ.வீயில் செய்தியைக் கேட்டார்கள். அவர்களும், அச்செய்தியைப் பார்த்த மற்றவர்கள் போல், அந்த அபலைப் பெண்ணுக்காக வருந்தினர்.

திடீரென்று, ஒரு நாள்  இரு காவல் அதிகாரிகள் அவர்கள் வீட்டின் முன் வந்து, உன்மாதனைப் பற்றியும், அவர்களின் உறவு பற்றியும் விசாரித்தனர். அவர்களுக்கு, தன் உயிரே தங்களிடமிருந்து சென்றது போலிருந்தது. வந்த அதிகாரிகள், உன்மாதன் பிறப்பு சான்றிதழ் நகல், அவன் படித்த பள்ளி, படித்த வகுப்பு என்று தங்களுக்கு வேண்டிய பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.

அன்றுமுதல், அவர்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதையும்  குறைத்துக் கொண்டனர். டீ.வீ ஒன்றுதான் அவர்களுக்குத் துணையாக இருந்தது. அதில் நிர்பயாவின் மரணத்தைப்பற்றியும், அவளுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளும், தங்கள் மகன் உன்மாதனின் பங்கும் கேட்கக்கேட்க அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, மேலும், தங்களைப் பற்றிய தாழ்வு எண்ணமும் அதிகரிக்கத் தொடங்கியது.

அப்போது, உன்மாதனுக்கு, அவன் மைனர் என்ற காரணத்தினால், தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க முடிந்தது என்ற செய்தி கேட்டு சற்று கவலை குறைந்தவர்களானார்கள்.

அவன் சிறைக்குச் சென்றபின், அவனைச் சென்று இரண்டு மூன்று முறைகள் பார்த்து வந்தனர். அவன் அவர்களைப் பார்த்து தான் செய்த கொடூரமான செயலுக்கு வருந்தியதாக ஒருபோதும் காட்டிக் கொள்ளவில்லை.

அதே சமயம், நிர்பயாவின் பெற்றோரும், மற்றவர்களும், உன்மாதனுக்குக் குறைந்த பட்சமாக ஆயுள் தண்டனையாவது கிடைக்கவேண்டுமென்று கூறிக் கொண்டேயிருந்தனர்.

திரும்பத் திரும்ப இவ்வித விவாதங்களைக் கேட்கக்கேட்க, அவர்களுக்கும், தங்கள் மகனாகவிருந்தாலும், உன்மாதன் இனி சாதாரண மனிதனாக வெளியே வாழ முடியாது என்று ஆழமாகத் தோன்றத் துடங்கியது. அவன் வெளியே வந்தால், அவன் நல்ல மனிதனாக மாறி வாழுவான் என்ற நம்பிக்கையும் குறைந்து வந்தது. மாகியும்,

ராமனும், தங்கள் மகன் உன்மாதனினால், ஒரு நல்ல குடும்பமே சீர் குலைந்து விட்டது;  இனி வாழ்வதில் ஒரு அர்த்தமுமில்லை என்று நம்பத்தொடங்கினர்.

இப்படியே, மூன்றாண்டுகள் முடியும் சமயமும் வந்தது. உன்மாதன், சிறையிலிருந்து திரும்பி வந்தால், இக்கிராமத்தில் ஒருவரும் அவனுக்கு தங்களுடன் தங்க அனுமதி கொடுக்க மாட்டார்கள். தங்களுக்கும் இனி வாழ்க்கையென்று ஒன்றுமில்லை என்றும் ஆழமாக எண்ணத்தொடங்கினர். 

ஒரு தீர்மானத்துடன், அவர்கள் உன்மாதன் விடுதலை நாளை எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

*****
இனி நம் கதைக்கு வருவோம்.

உன்மாதனை ஏற்றிச் சென்ற காவல் நிலய ஊர்தியில், உன்மாதன் சற்று மயக்க நிலையில் இருந்தான். உட்கார்ந்த இடத்திலேயே தலை சாய்ந்துவிட்டான். காவல் அதிகாரிகளுக்குக் கவலை உண்டாயிற்று. அவனை உடனே, அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவனை அங்கே பரிசோதித்ததில், அவன் ஒரு அரை மணி நேரம் முன்பே இறந்து விட்டதாகவும், அவன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பும் படியும் மூத்த மருத்துவர் ஆணையிட்டார். காவல் அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை.

ஒரு ஐந்து - ஆறு கிலோமீட்டர் தொலைவில், மாகியும், ராமனும் சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு, ஏதோ சந்தேகம் தோன்ற, சற்றே தலையைத் திருப்பி பார்த்தார். பின்னே அமர்ந்திருந்த இருவரும், ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு ஒரு உணர்வுமில்லாதது போல் இருந்தனர்.  ஓட்டுனர், ஆட்டோவை சற்றே ஓரமாக நிறுத்திவிட்டு, அவர்களை எழுப்ப முயற்சித்தார். ஒரு பயனுமில்லாமல், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார். அங்கே அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், அவர்களிருவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் உயிர் இழந்துவிட்டிருக்கிறார்கள் என்று கூறி, காவல் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறும் கூறி விட்டு சென்றார்.

இந்த செய்தி, காட்டுத்தீ போல், டீ.வீ சானல்களில் ஒரு மணி நேரத்திற்குள் ஒளி பரப்பாகத் தொடங்கியது.

நிர்பயாவின் பெற்றோர் இந்த செய்தியைப் பார்த்துவிட்டு, அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். உன்மாதனுக்கு அதிக தண்டனை கிடைக்க வேண்டுமென்று தாங்கள் எதிர்பார்த்ததற்கு பதில், அந்த பொல்லாத மகனின் பெற்றோர்களின் உயிர்களையும் எடுத்துச் சென்று விட்டானே என்று வருந்தத் தொடங்கினர்.

டீ.வீ. சானல்கள் இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு, இன்னும் ஒரு வாரம் ஓட்டி விடலாமென்று புது உணர்வுடன் தங்கள் முயற்சியில் ஈடுபட்டனர்.

அரசியல்வாதிகள் இனி பெண்கள் பாலியல் தாக்குதலால் படும் தொல்லைகளைப் பற்றி சற்று கவலைப் படாமல் இருக்கலாமென்று பெருமூச்சு விட்டனர்.
******

Tuesday 1 December 2015

மூன்றாவது கண்


இடம்: செழு நாடு
“நம் நாடு இன்று ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்லுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தொழில் உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்; கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்; விஞ்ஞான முயற்சியில் வளர்ந்துள்ளோம்;  அவ்வாறாக, ஒவ்வொரு துறையிலும்  முன்னேற்றம் அடைந்துள்ளோம். மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். அதற்காக, நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.”
செழு நாட்டின் ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன் தன் நாட்டு மக்களைக் கவர்ந்த வண்ணம் மிகத் தெளிவாகவும், மிக உள்ளன்புடனும் தன் சொற்பொழிவை ஆற்றினார்.
செழு நாட்டின் இரு எல்லைகள் கடலால் சூழ்ந்திருந்தன. ஒரு எல்லை தொழு நாட்டுடனும் மற்றொரு எல்லை வீரிய மலைத் தொடருடனும் இருந்தன. இதன் தலை நகரம் கடலோரமாக உள்ள கடலூர் ஆகும்.
ஜனாதிபதியின் அலுவலகம் கடலை நோக்கி இருக்கும் வண்ணம் அதன்  மிக அருகில் கட்டப் பட்ட மாளிகையில் அமைந்திருந்தது. அவர் தங்கும் இடமும் அலுவலத்தின் அருகிலேயே இருந்தது.
வளர்ச்சிவேந்தனின் உந்துதலால், நாடு எவ்வாறு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லுகிறது என்றும், மக்கள் கடமைகள் என்ன என்றும், வாட்ஸ்அப், ட்வீட்டர், ஃபேஸ்புக் என்று எல்லா கணித்தளங்களும் விவாதங்களையும், விமர்சனங்களையும், மாற்று கருத்துக்களையும், அள்ளித் தெளித்த வண்ணமாக இருந்தன.
“நம் ஜனாதிபதி ஒரு தீர்க்கதரிசி. நாடு முன்னேற்றம் அடைவதில் மிக அக்கறை கொண்டுள்ளார்.  ஆனால்.....,“ என்று இழுத்தார், செந்தில்.
“என்ன  ஆனால்?”, அவர் நண்பர் செல்வன்.
“நம் நாடு செழிப்புடன் இருப்பதில் அக்கறை காட்டுவது மிக முக்கியமான ஒரு விஷயம் தான். மறுக்க முடியாததும்கூட. ஆனால்.....,“  என்று மீண்டும் இழுத்தார், செந்தில்.
“என்னையா  ஆனால்?”, பொறுமை சற்று குறைந்த வண்ணம் வினவினார் அவர் நண்பர் செல்வன்.
“எங்கப்பா சொல்லுவார், வாங்குடா கடனை, தின்னுடா அல்வாத்துண்டை; அது போல, நம்ம நாடும் வளர்ச்சி,  வளர்ச்சி என்ற பேரில் மக்களின் கடன் சுமையையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி தெரிகிறது. மகிழ்ச்சி கூடியதாக தெரியவில்லையே!”, வருத்தம் தொனித்த குரலில் செந்தில் விளக்கம் கொடுத்தார்.
“நம் எல்லோருக்கும் தெரியும், ஜனாதிபதி அலுவலகத்தை ஒட்டியே அவர் வசிக்கும் பங்களா  ஒரு ரம்யமான அமைப்புடன் இருக்கிறதென்று. அதைச் சுற்றி ஒரு பூங்கா,  அதில், கண்ணைக் கவரும் வண்ணம் தோட்டக்கலையில் சிறந்த பொறியாளர்களைக் கொண்டு வித விதமாகவிறுக்கும் மலர்ச் செடிகளும், வெளிநாடுகளிலிருந்து தருவித்த கவர்ச்சி வகைகளான செடிகளும் பார்ப்பவர்களுக்கு பிரமிப்பூட்டுமாறு இருக்கிறது.  நூதன கருவிகளை உபயோகப்படுத்தி தண்ணீர் பம்புகள் வழியாக தோட்டக்கலைங்கர்கள் அங்கங்கே செடிகளுக்கு தண்ணீர் செலுத்திக் கொண்ட்டிருக்கின்றனர். எங்கும் பச்சைபசேலென்றிருக்கிறது. ஆனால்,” என்று மறுபடியும் இழுத்தார், செந்தில்
“அதற்கென்னையா, இப்போது?” பொறுமையின் விளிம்பில் இருந்தார் அவர் நண்பர் செல்வன்.  
“பொறுமை, சற்று பொறுமை நண்பரே, என்று தொடர்ந்தார் செந்தில்
“அவ்வளவு செழுமையாகவா நம் நாடு இருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளின் தங்கும் இடங்களும் எதோ நம் நாடு என்ன ஸ்விட்சர்லாந்தோ என்று பிரமிக்கவைக்கும் வண்ணம் இருக்கின்றன. ஆனால், நாம் நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான குடிநீர் கிடைக்காமல்,  தண்ணீர் டாங்கர்களை நம்பி வாழும் நிலைமையில் இருக்கிறோம்.  நம் நாட்டில் தண்ணீர் டாங்கர்கள் இங்கும் அங்கும் சென்ற வண்ணமாக இருப்பது ஒரு சாதரணமான காட்சியாகி விட்டது. அது உங்களுக்குத் தெரியாதா?  நாட்டின் உயிர் நாடியே தண்ணீர்தான். அந்தத் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலையில் இன்று நாம் இருக்கிறோம். இப்போது, இமய மலையே வற்றிவிடும் வண்ணம் அதைச் சுற்றி பெரிய அணைகளைக் கட்டி வருகிறார்கள். நம் நாட்டின் விவசாய வளர்ச்சிக்கும், நம் குடி தண்ணீர் தேவைக்கும், அண்டை நாடான தொழு நாட்டை நம்பி வாழும் நிலையில்தான் இன்றும் நாம் இருக்கிறோம். அடுத்த உலகச் சண்டை தண்ணீருக்காகத்தான் இருக்குமென்றும், விஞ்ஞானிகள் கருத்து சொல்கிறார்கள்,“ செந்தில் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
“ஆமாம், ஆமாம். அதுவும் உண்மைதான்; சுத்த தண்ணீர் கிடைக்காததினால் டாக்டர்களுக்குத்தான் நல்லதாயிற்று. தண்ணீர் சார்ந்த நோய்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. சரி, சரி, வாருங்கள், செல்லலாம்.”
நண்பர்களும் பேசிக்கொண்டே வீடு திடும்பினர்.
***
இடம்: செழு நாடு ஜனாதிபதி அலுவலகம்.
ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன் தன் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உள்நாட்டு அமைச்சர் இருவரையும் அழைத்திருந்தார்.
“நம் நாடு தொழில் வளத்தில் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. ஆனால், இந்த வருடமும், மழை பொய்த்ததினால், விவசாயம் செய்ய முடியாமல் உணவு உற்பத்தி குறைந்து விட்டது.  தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகரித்துள்ளதாகவும்  செய்தி வந்துள்ளது. நம் நாடு தொழு நாட்டை விட பரப்பளவில் சற்று பெரியதாக இருந்தாலும், நம் நாட்டிற்குத் தேவையான தண்ணீர் நம் நாட்டின் உயிர் நாடி மஹா நதியிலிருந்துதான் கிடைக்கிறது. அதுவோ தொழு நாட்டில் தொடங்கி கடைசியில் ஒரு வாய்க்கால் போன்றுதான் நம் நாட்டிற்கு வருகிறது. அந்த நதியின் முக்கிய பகுதியாய் உள்ள  நதியூரை நம் நாட்டின் பகுதியாக ஆக்கிவிட்டால்தான் நம் நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும். அதனால் தொழு நாட்டிற்கும் அதிக பாதிப்பு இருக்காது. மேலும்,  நம் நாட்டு மக்களின் நலம் தான் நமக்கு முக்கியம். அதை கவனத்தில் கொண்டு நாம் செயல் பட வேண்டும்.” வளர்ச்சிவேந்தன் தன் அமைச்சர்களிடம் தன் மனதில் நிச்சயித்ததை விவரித்தார். அவர்களிடம் நாட்டின் பாதுகாப்பைக் கருதி எடுத்த முடிவுகளை ரகசியமாகவே வைத்துக்கொள்ள ஆணையுமிட்டார். இரு அமைச்சர்களும் அமைதியாக இருந்தனர்.
*****
இடம்: தொழு நாட்டின் ஜனாதிபதி தீர்க்கதர்சனின் அலுவலகம்.
அறையின் உள்ளே நுழைந்தவுடன் எல்லோர் கவனத்தையும் கவரும் வண்ணம் மிகப் பெரியதாக கணினி வழியாகத் தெரிவது இந்த செய்திதான். 
“நம் நாட்டின் பெரும் மதிப்பு மிக்க சொத்துக்கள் மனிதர்களே. மனித மேலாண்மை  நம் நாட்டின் நோக்கங்களைச் சாதிக்க தனிப்பட்ட முறையிலும் சேர்ந்தும் எடுக்கப்படும் முயற்சிகளும் திட்டங்களும் ஆகும்.
ஆகவே, மக்களின் நலனும் அவர்களின் நல் வாழ்க்கையும் தொழு நாட்டின் தெளிவுப் பார்வையாக இருந்தது. அதற்காக ஜனாதிபதி தீர்க்கதர்சன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்  மக்களின் நலனை கருவாகக் கொண்டு இருந்ததென்றால் மிகையாகாது.
ஜனாதிபதி தீர்க்கதர்சன் செழு நாடு ஒவ்வொரு வருடமும் வரட்சியால் துன்பப் படுவதை அறிந்தும் இருந்தார். ஆனால் அந்நாட்டின் போர் தொடுக்கும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதியோ, அமைச்சர்களோ  ஒன்றும் அறியாதவர்களாகவே இருந்தனர்.    
இந்நிலையில், “சரி; மக்கள் நல அமைச்சரையும், கலாச்சார அமைச்சரையும் கூப்பிடுங்கள். பேச வேண்டும்,”  தீர்க்கதர்சன் தன் மூத்த அதிகாரியிடம் ஆணையிட்டார்.
மக்கள் நல அமைச்சரும், கலாச்சார அமைச்சரும் வந்தனர். அந்தந்த அமைச்சர்களின் உயர் அதிகாரிகளும் அவர்களுடன் வந்தனர்.
“31 ஜனவரியன்று உலக கலாச்சாரம் மற்றும் அமைதி தினமாகக் கொண்டப்படுகிறது. அதற்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ளன. அதை ஒட்டி,  மாநாடு ஒன்றை நடத்தும் ஏற்பாடுகள் பற்றி நிலை என்ன?”  தீர்க்கதர்சன் வினவினார்.  
மாநாட்டின் தலைப்பு, மாநாட்டின் வடிவம், நடத்த வேண்டிய இடம், யாராருக்கு அழைப்பிதழ்கள் அனுப்ப வேண்டும், முக்கியமாக, வெளிநாட்டிலிருந்து வரும் தலைவர்கள், பிரமுகர்கள் என்று  துல்லியமாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் இரு அமைச்சர்களும்  விளக்கம் கொடுத்தனர்.  சில மணி நேர விவாதங்களுக்குப் பின், ‘மக்கள் - நல் வாழ்க்கை - நாட்டின் பங்கு’ என்பதை மாநாட்டின் தலைப்பாகத் தீர்மானம் செய்தனர். மாநாட்டை மழைக்காலம் முடிந்தவுடன் நதியூரில் நடத்துவதாகவும் முடிவு எடுத்தனர்.
விவாதம் முடிந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கலைந்து சென்றனர்.
தீர்க்கதர்சன் சற்று கண்ணை மூடி அமைதியானார்.
பிறகு, பாதுகாப்பு அமைச்சரையும், உள் நாட்டு அமைச்சரையும் அழைக்குமபடி ஆணையிட்டார். அவர்களும் உடனே வந்தனர்.
“உலக மாநாடு நதியூரில் நடத்துவதாகத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஆனால், அண்டைய நாடான செழு நாடு, தன் நாட்டின் தண்ணீர் பிரச்சனையை முன் வைத்து அடிக்கடி தொல்லை கொடுத்த வண்ணம் இருக்கிறது. அவர்கள் அரசாங்கம் ஏதோ 200- 300 ஆண்டுகள் முன்பு நதியூர் செழு நாட்டுடன் இருந்ததாகவும், அதனால், நதியூர் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம் என்றும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த மாநாட்டை நதியூரில் நடத்தி, அந்த ஊர் நம் நாட்டின் பகுதிதான் என்று உலகுக்குத் தெரிவிப்பதற்கும் இது நமக்கொரு வாய்ப்பாகும். நாம் ஒரு போதும், நதியூரைத் தொழு நாட்டிற்கு விட்டுக் கொடுக்கவும் கூடாது, நதியூரின் முக்கிய நதியிலிருந்து வரும் தண்ணீரையும் தொழு நாட்டுடன் பகிர்ந்து கொள்ளவும் இயலாது.   
இம் மாநாடு நடக்கும் சமயத்தில், நமக்கு செழு நாட்டிலிருந்து ஒரு தொல்லையும் வராத வண்ணம், பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட வேண்டும்.”
ஜனாதிபதி கூறியதை அமைச்சர்கள் மிக கவனமாக கேட்டனர்.
தொலைக் காட்சி அலைவரிசைகள் எல்லாம் அரசின் மாநாடு நடத்தப் போகும் முடிவுகளைப் பற்றிய விவரங்களை வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு மக்களுக்குத் தெரியும் வண்ணம் வெவ்வேறு கோணங்களில் விளக்கிக் கொண்டிருந்தன.
****
இடம்: செழு நாடு - ஜனாதிபதி அலுவலகம்.
ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன், பாதுகாப்பு அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கூடியிருந்தனர். முக்கிய அரசவைக் கூட்டம் தொடர இருந்தது.
பாதுகாப்பு அமைச்சர் தன் கைகளில் சமீபத்தில் கிடைத்த ஸ்கேனிங் ரிபோர்டை மிக கவனமாக வைத்திருந்தார். அந்த ரிபோர்டில்,  தொழு நாட்டின் முக்கிய அரசியல் புள்ளிகள் பற்றியும், மஹா நதி செல்லும் பாதையின் வரைபடமும் தெளிவாக இருந்தன. அதை, ஜனாதிபதி முன் சமர்ப்பித்து அதன் சுருக்கத்தைக் கூறினார்.
“மாநகர் தெற்கு, மாநகர் வடக்கு, புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு என்று பிரிக்கப்பட்டிருக்கிற நதியூர் நகரம் மஹா நதி செல்லும் பாதையில் இருக்கும் ஒரு மிக முக்கியமான  நகரமாகும். அது தொழு நாட்டின் எல்லையிலிருந்து மிக அருகில் இருக்கும் நகரமும் ஆகும்.”
அவரின் கணிப்புப்படி நதியூரைக் கைப்பற்றி விட்டால், நம் நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். அந்த விதத்தில்,  பாதுகாப்பு அமைச்சர் அந்த நதியூரை கைப்பற்ற ராணுவத்தின் திட்டத்தை விளக்கினார். 
ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன், பாதுகாப்பு அமைச்சர் அளித்த விளக்கத்தை மிக்க கவனமாகக் கேட்டு விட்டு, சற்று யோசனையில் ஆழ்ந்தார். சற்று நேரம் கழிந்து, எப்போது மழைக் காலம் தொடங்குகிறது?” என்று வினவினார்.
“நம் நாட்டில் இன்னும் ஐந்து மாதங்களில் மழை பெய்யத் தொடங்க வேண்டும். அச்சமயம் தொழு நாட்டில் மழைக்காலம் முடிவுக்கு வரும் சமயமாக இருக்கும். ஆனால், மழை இரண்டு மூன்று வருடங்களாக நம் நாட்டில் பொய்த்து விட்டதே. அப்படியே மழை பெய்தாலும், மிகக் குறைவாகவே பெய்கிறது,”  என்றார் ஜனாதிபதியின் முக்கிய அதிகாரி புத்திகூர்மன். 
“சரி, நாம் நதியூரை பிடிப்பதற்கும் அதுவே சரியான தருணமாகும். ராணுவத்தைத் தயார் செய்யுங்கள்,” ஆணையிட்டார் வளர்ச்சிவேந்தன்.
“அப்படியே செய்து விடுகிறேன்,” என்று கூறினார் பாதுகாப்பு அமைச்சர்.
பிறகு, அமைச்சர்களும் அவர்களின் அதிகாரிகளும் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, ஜனாதிபதி வளர்ச்சிவேந்தனின் முக்கிய அதிகாரி, புத்திகூர்மன் அவரருகில் வந்து தன் மொபைலில் வந்த செய்தியைக் காண்பித்தார். வளர்ச்சிவேந்தன் புருவத்தைச் சற்று சுருக்கி செய்தியைப் படித்து விட்டு புத்திகூர்மனைப் பார்த்தார்.
***
உலக மாநாட்டில் பங்கு கொள்ள தொழு நாட்டிலிருந்து அழைப்பிதழ் அனுப்புவதாக மொபைலில் முன்னதாகவே செய்தி கொடுத்திருந்தார் செழு நாட்டு தூதுவர். மாநாடு 31 ஜனவரி அன்று நடை பெற இருப்பதாகவும் கூறியிருந்தார்.  வளர்ச்சிவேந்தனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல், தன் நாடு நதியூரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு அந்த தருணமே சரியாக இருக்குமென்றும் தீர்மானித்தார். தன் பாதுகாப்பு அமைச்சரை உடனே வருமாறு அழைப்பு விடுத்தார்.
“அமைச்சரே, தொழு நாட்டிலிருந்து உலக மாநாட்டில் பங்கு கொள்ள அழைப்பிதழ் வந்துள்ளது. அது 31 ஜனவரி அன்று நடை பெறவுள்ளது. நாம் நதியூரைப் பிடிக்க ஃபிப்ரவரி இரண்டாம் தேதியே   சரியான தருணமாக இருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்தி முடித்து விட்டு, தொழு நாட்டின் அரசாங்கமும், மக்களும் மிகவும் சோர்ந்திருப்பார்கள். நம் திட்டமும் சுலபமாக முடிந்து விடும். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” வினவினார் வளர்ச்சிவேந்தன்.
“ஆகா! அதுதான் சரியென்று எனக்கும் தோன்றுகிறது,” பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்தார். அவர் மேலும் தொடர்ந்தார்.
“அந்த மாநாடு நடக்கும் தருணத்தை பயன் படுத்தி நம் நாட்டு ஒற்றர்களை முன்னதாகவே மாநாட்டில் கலந்து கொள்ளும் நம் பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் அங்கேயிருந்து நம் முயற்சிக்கு வேண்டிய ரகசிய தகவல்களைக் கொடுக்க மிக உதவியாகவிருக்கும்.” 
“அதுவும் சரியான யோசனைதான். அதற்கு மிகச்சிறந்த  ஒற்றர்களை தேர்ந்தெடுங்கள். நீங்கள் போகலாம்,” என்றார் வளர்ச்சிவேந்தன்.
***
இடம்: செழு நாடு. ஜனாதிபதி அலுவலகம்.
வளர்ச்சிவேந்தன் தன் கணினியில் வரும் ஈ-மெய்ல் செய்திகளையும், கடிதங்களையும் பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, நதியூரைக் கைப்பற்றும்  தன் திட்டத்தை சுலபமாக்கும் வகையிலும் ஒரு நல்ல எண்ணத்தை தொழு நாட்டு ஜனாதிபதி மனதில் பதிய வைக்கும் வகையிலும், மக்கள் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் ஒரு திட்டத்தை நிறைவேற்ற அவருக்கு ஆலோசனை தேவைப் பட்டது. உடனே, வெளிநாட்டு அமைச்சர் மற்றும் திட்ட அமைச்சரையும் வருமாறு உத்தரவு இட்டார்.
இருவரும் உடனே வந்து சேர்ந்தனர்.
வளர்ச்சிவேந்தன் தான் நதியூரை கைப்பற்ற இருக்கும் திட்டத்தை கூறவில்லை. ஆனால், அதை மனதில் கொண்டு, நல்லுறவு நோக்கத்துடன் இரு நாடுகளின் மக்கள் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் திட்டம் ஒன்றை கூறுமாறு வினவினார்.
இருவரும், தங்களுக்குள்ளும், தங்களுடன் வந்துள்ள உயர் அதிகாரிகளுடனும் விவாதித்து ஒரு திட்டத்தை அவர் முன் சமர்ப்பித்தார்கள். சுருக்கமாக, திட்டம் இதுதான்.
செழு நாட்டின் ஒரு பகுதி தொழு நாட்டின் ஒரு பகுதி வழியாகச் செல்லும் நிலையில் இருந்தது. இது, இரு நாட்டு மக்களுக்கும் போக்குவரத்தில் மிகவும் துன்பத்தைத் தந்த வண்ணமாக இருந்தது. அப்பகுதி நதியூருக்குச் செல்வதற்கு ஒரு தடையாகவும் இருந்தது; ஆகவே, இவ்விரு இடங்களையும் ஒன்று சேர்க்கும் வண்ணம் ஒரு நீண்ட நெடுஞ்சாலையை அமைப்பது செழு நாட்டு வர்த்தகத்திற்கும் மிக உதவியாக இருக்கும் என்று தங்கள் கருத்தை முன் வைத்தனர்.
“திட்டம் நல்லதாகத்தான் தெரிகிறது. ஆனால், இதைச் செய்து முடிக்க முக்கியமாக இரண்டு தடைகளைத் தாண்ட வேண்டுமே! ஒன்று, தொழு நாடு நம் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். இரண்டு, அவ்வாறு ஒரு நெடுஞ்சாலையை அமைப்பது குறுகிய காலத்தில் முடியுமா?”
வெளி நாட்டு அமைச்சர்,  “நம் திட்டத்திற்கு, தொழு நாட்டின் ஒப்புதலைப் பெறுவதில் அதிக சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை. நான் அதற்கான வேலைகளை உடனே துவங்க ஆரம்பிக்கிறேன்” என்றார்.
“மகிழ்ச்சி. திட்ட அமைச்சரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இத்திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவு காலம் பிடிக்கும்? மூன்று மாதங்களில் முடிக்க முடியுமா?’  என்று திட்ட அமைச்சரைக் கேட்டார்.
திட்ட அமைச்சர், சற்று யோசனைக்குப் பின், தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விட்டு, “மூன்று அல்லது அதிக பட்சமாக நான்கு மாதங்களிலாவது முடித்து விட முடியும்,” என்று உறுதி அளித்தார்.
ஜனாதிபதிக்கு திருப்தியாகி விட்டது. தன் முக்கிய திட்டமான நதியூரை செழு நாட்டுடன் சேர்ப்பது சாத்தியம் ஆகும் என்று மிக நம்பிக்கையுடன் இருந்தார்.
இரு அமைச்சர்களையும் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டிய ஏற்பாடுகளை உடனே துவங்க உத்தரவிட்டார்.
***
இடம்: தொழு நாடு. வெளிநாட்டு அமைச்சர் அலுவலகம்.
செழு நாட்டு அமைச்சரின் சிறப்பு தூதர் வெற்றிவீரன் தொழு நாட்டின் உயர் அதிகாரியைச் சந்தித்து தன் நாட்டு ஜனாதிபதியின் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை விளக்கிக் கூறினார். 
செழு நாட்டு அமைச்சரும் அத்திட்டத்தில் தந்நாட்டிற்கு பயன் இருப்பதை உணர்ந்து, “உங்கள் திட்டத்தைப் பற்றி என் நாட்டு அமைச்சரிடமும்,  ஜனாதிபதியிடமும் விவாதிக்க வேண்டும், அதற்கு சற்று அவகாசம் தேவை. உங்கள் நாட்டு அமைச்சரை என் நாட்டு அமைச்சரிடம் நேரடியாகப் பார்த்து பேசச் சொல்லுங்கள்,” என்று கூறினார்.
***
இடம்: தொழு நாடு. ஜனாதிபதி அலுவலகம்.
செழு நாட்டு அமைச்சரின் சிறப்பு தூதர் வெற்றிவீரனின் வருகையைப் பற்றி ஜனாதிபதியிடம் விளக்கினார் வெளிநாட்டு அமைச்சர். இந்த நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்காக ஆகும் முழு செலவையும் செழு நாடே ஏற்றுக் கொள்ள முன் வந்திருப்பதாகவும் கூறினார்.
தீர்க்கதர்சன் யோசனையில் ஆழ்ந்தார்.
இரு நாடுகளும் இணைக்கும் வண்ணம் நெடுஞ்சாலை அமைப்பது நல்ல திட்டமாகவே தெரிகிறது. ஆனால், செழு நாடு இத்திட்டத்தின் முழு செலவுகளையும் ஏன் ஏற்றுக் கொள்ள முன் வருகிறது? இதில் ஏதாவது சூது கலந்த திட்டம் இருக்குமோ அல்லது இதன் உள் நோக்கம் என்னவாக இருக்கும்  என்ற சந்தேகமும் எழுந்தது.
அவரின் சந்தேகத்திற்கு காரணமில்லாமல் இல்லை. காலம் காலமாக இரு நாட்டுக்கும் தீராத தண்ணீர் பிரச்னை இரு நாட்டின் உறவையும் மிக பலவீனப்படுத்தி விட்டதுதான் காரணம்.
அவர் தன் வெளினாட்டு அமைச்சரிடம் தன் சந்தேகத்திற்கு காரணத்தைக் கூறினார். வெளினாட்டு அமைச்சருக்கும் சற்று தயக்கம் வந்து விட்டது,  இத்திட்டத்தின் பின் ஏதாவது சதித்திட்டம் இருக்குமோ என்று.
ஆனால், இது போன்ற திட்டம் நம் நாட்டுக்கும் நன்மையைத்தான் அளிக்கும் என்றும் எண்ணினார். இத்திட்டத்தை நிறைவேற்ற நம் நாட்டின் தற்போதிருக்கும் பொருளாதார நிலமையும் இடம் கொடுக்காது என்றும் நினைத்தார்.
நேரமும் காலமும் நமக்கு சரியில்லை என்றால், தவறான முடிவுகள்கூட சரி என்றே நமக்குத் தோன்றும். அதைத்தான் சனி பிடித்து விட்டது என்பார்களோ! அவ்வாறுதான், இப்போது தீர்க்கதர்சனுக்குத் தன் தூர நோக்கப் பார்வையை இழந்து விட்டது போல் தோன்றியது.
அவரே, சற்று நேரம் கழித்து தன் அமைச்சரிடம், செழு நாட்டின் திட்டத்திற்கு, ஒப்புதல் அளித்தார். 
அமைச்சருக்கும் இத்திட்டத்திற்கு ஒப்புதலை ஜனாதிபதி கொடுப்பதற்கு தான் ஒரு காரணமாக இல்லை என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டு சமாதானம் செய்து கொண்டார்.
“சரி, நம் ஒப்புதலை செழு நாட்டிற்குத் தெரிவிக்கிறேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.     
***
இடம்: செழு நாடு. ஜனாதிபதி அலுவலகம்.
ஒரு வாரம் கழித்து, இரு நாட்டு அமைச்சர்களும் சந்திக்க ஏற்பாடாயிற்று. இரு நாடுகளை இணைக்கும் வண்ணம் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்து, ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தன் அமைச்சர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். அவர் தான் போட்ட பெரிய  திட்டத்தின் நெடுஞ்சாலை அமைக்கும் உள் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது தனக்குக் கிடைத்த முதல் வெற்றியென்று கருதி மகிழ்ந்தார்.
***
டிசம்பர் மாதத்தில் கடைசி வாரம்.
இடம்: செழு நாட்டின் பகுதியில் நெடுஞ்சாலை தொடங்கும் இடம்.
வளர்ச்சிவேந்தன் அந்த நெடுஞ்சாலையை மக்களுக்கு திறந்து வைத்தார். முதல் வாகனத்தில்,  தொழு நாட்டிற்கு, தன் நாட்டின் பரிசாக தன் நாட்டில் மிக விரும்பும் மிக ருசியான கொய்யாப் பழங்களை அனுப்பி வைத்தார்.
இடம்:  தொழு நாட்டின் பகுதியில் நெடுஞ்சாலை தொடங்கும் இடம்.
மக்கள் கூட்டத்துடன் வெளிநாட்டு அமைச்சரும் காத்திருந்தார். செழு நாட்டிலிருந்து வந்த  பரிசான கொய்யாப் பழப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டார்.
இரு நாட்டிலும் வாழ்க்கை இயல்பாக செல்லத் தொடங்கியது.
***
30 ஜனவரி
இடம்: செழு நாடு- பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம்.
பாதுகாப்பு அமைச்சர் முப்படை தளபதிகளையும் உடனே தன் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். மூன்று தளபதிகளும் துரிதமாக வந்தனர்.
அவர்களிடம் ஜனாதிபதியின் நதியூரைக் கைப்பற்றும் திட்டத்தை விளக்கினார்.
“இத்திட்டம், ஃபிப்ரவரி இரண்டாம் தேதி நள்ளிரவிற்குப்பின் தொடங்கி ஃபிப்ரவரி மூன்றாம் தேதி விடிகாலைப் பொழுதுக்குள் முடிவடைய வேண்டும். ஒரு லைட்டினிங்க் அட்டாக்காக இருக்க வேண்டும். தொழு நாட்டில் ஜனவரி 31ம் தேதி உலக மாநாடு நடக்கவிருக்கிறது. அது முடிந்து வெளி நாட்டு பிரமுகர்கள் எல்லோரும் ஃபிப்ரவரி ஒன்றாம் தேதியே தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பச் செல்வதாக நமக்கு தகவல்கள் வந்துள்ளன. ஆகவே, ஃபிப்ரவரி இரண்டாம் தேதி நள்ளிரவில் நம் தாக்குதலை வைத்துக் கொள்ள தீர்மானமாகியுள்ளது.
“ஃபிப்ரவரி இரண்டாம் தேதியா? முப்படை தளபதிகளுக்கும் இந்த செய்தி மிக ஆச்சரியத்தையும் சற்று அதிர்ச்சியையும் தந்தது. இருந்தாலும்,  ஜனாதிபதியின் ஆணையாயிற்றே; ஆகவே இனி மேலே நிறைவேற்ற வேண்டிய கட்டளைக்காகத்தான்  காத்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சர் முதலில் தரைப்படை தளபதியிடம், “நம் படைகள் நதியூரைக் கைப்பற்றும் திட்டத்தில் முக்கியமாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள், இரண்டு. முதலாவதாக,  எவ்வளவு குறைந்த நேரத்தில் நதியூரைப் கைப்பற்ற முடியுமோ அவ்வளவு நேரம்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த திட்டம் நிறைவேற்றுவதில்  குறைந்த அளவு உயிர் சேதம் ஆகவேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.”
அதற்கு தேவைப்படும் ராணுவ வீரர்களை இம்முற்றுகைக்குத் தயார் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டார்.
விமானப்படை தளபதிக்கும், ராணுவ தளபதிக்கும் தான் கூறியவற்றில் கவனம் இருக்க வேண்டும் என்று கூறினார்.
கடற்படை தளபதிக்கு, “உங்கள் பணி நம் நாட்டு கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து எவ்வித அத்து மீறல்களும் நேராமல் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த நதியூர் முற்றுகையில் நேரடியாகப் பங்கு கொள்ள தேவையிருக்காது என்று நம்புகிறேன்.”
கடற்படை தளபதியும் அமைச்சர் சொன்னதை ஆமோதிக்கும் வண்ணம், “சரி, அப்படியே செய்கிறேன்,” என்றார்.
பாதுகாப்பு அமைச்சரின் கட்டளையைப் பெற்றுக் கொண்டு மூன்று தளபதிகளும் அவரவர் அலுவலங்களுக்கு விரைந்தார்கள்.
விமானப்படை தளபதி  அதை நிறைவேற்றும் வண்ணம் உடனே தன் உயர் அதிகாரி ஒருவரை அழைத்து போரில் பங்கு கொள்ள  வேண்டிய  தேவையான விமானங்களுடன் கடலூரிலிருந்து கிளம்பத் தயாராகும்படி ஆணை இட்டார்.
அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லைதான். ஆயினும் ஜனாதிபதியின் கட்டளையை மீற முடியாமல் போரில் விமானப் படையை ஈடுபடுத்த சம்மதித்தார்.
புறப்படும்போது  அமைச்சர் தளபதியிடம் கண்டிப்பாகச் சில கட்டளைகளையும்  இட்டிருந்தார். அதாவது நதியூரை தரைப்படைகள் நெருங்கியதும் அவர்களுக்கு உதவி புரியும் வண்ணம், விமானப் படை இருக்க வேண்டும். நேரடியாக போரில் ஈடுபடக்கூடாது. ஆகவே போரில் பங்கு பெறும் விமானங்களை ஒரு தனியான இடத்தில் நிறுத்திக்கொண்டு, அமைச்சரின் ஆணைக்காகக் காத்திருக்க வேண்டும். பிறகுதான் தாக்குதலில் ஈடுபட வேண்டும். மேலும், விமானப்படை பங்கேற்பதைப் பற்றி வேறு எவருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும்.
தளபதி மனதில் பெரிய பாரத்துடனேயே புறப்பட்டு வந்தார். அவர் கீழிருந்த விமானிகளில் பலருக்கு எதற்காக நதியூரை நோக்கிப் போகிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை. இதனால் அவருடைய மன வேதனை அதிகமாயிருந்தது. அவர்களிடம் நதியூரை கைப்பற்ற ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்று எப்படிச் சொல்வது என்று தயங்கினார். ஏனெனில், விமானிகள் நம் நம்பிக்கையில் இருந்தால்தான் நாம் இடும் ஆணைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்....ஆகவே,  தன் நம்பிக்கைக்கு பாத்திரமான விமானிகளாகத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஜனாதிபதியின் திட்டத்தை சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். இப்போதுதான், தளபதிக்கு தன் மனதில் இருந்த சுமையை கீழே இறக்கி வைத்தாற்போல் இருந்தது.
ஆனால், தளபதி திரும்பி வருவதற்குள்ளாகவே விமானிகளுக்கு விஷயம் தெரிந்து விட்டது. இருந்தாலும், தங்களுக்கு ஒன்றும் தெரியாததுபோல் தளபதி கூறிய செய்தியை கவனமாகக் கேட்டார்கள்.
***
ராணுவ தளபதியும் மிக குழப்பத்துடன் தன் அலுவலகத்திற்குத் திரும்பினார். வந்தவுடன், தன் மற்ற அதிகாரிகளைக் கூப்பிட்டு நதியூரைக் கைப்பற்ற வேண்டிய ராணுவ வீர்ர்களை கணக்கு எடுத்தார். அவர்களுக்கு எந்த விதமான தாக்குதல் மேற்கொள்ள வேண்டுமென்றும் விளக்கிக் கூறினார். இந்த திட்டத்தின் முக்கிய நுணுக்கங்களையும் விளக்கினார்.
“நம்மிடம் இருக்கும் சமயம் மிகக் குறைவு - ஒரு சில மணி நேரங்கள்தான். நதியூரைக் கைப்பற்ற.    இத்திட்டம், ஃபிப்ரவரி இரண்டாம் தேதி நள்ளிரவிற்குப்பின் தொடங்கி,  ஃபிப்ரவரி மூன்றாம் தேதி விடிகாலைப் பொழுதுக்குள் முடிவடைய வேண்டும். ஒரு லைட்டினிங்க் அட்டாக்காக இருக்க வேண்டும்.” தனக்கு கிடைத்த ஆணையைத் திரும்பி தன் அதிகாரிகளுக்குக் கூறினார்.
***
31 டிசம்பர்
இடம்: நதியூர், தொழு நாடு.
நதியூர் விழாக் கோலம் பூண்டு புதுப்பொலிவுடன் தோன்றியது. வெளி நாட்டு பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும், நகரம் முழுவதும் அங்குமிங்கும் சென்ற வண்ணமாக இருந்தனர். ஜனாதிபதி தீர்க்கதர்சன் மற்றும் அவரின் எல்லா அமைச்சர்களும் வந்திருந்தனர்.
உலக அமைதி மாநாடு பாரம்பரிய வழியில் தொடங்கியது.
ஜனாதிபதி தீர்க்கதர்சன், நவீன உத்திகளான கணினி வழங்கல் முறையை உபயோகித்து தன் தொடக்க விழாப் பேருரையை ஆற்றினார்.  
திரையில் மூன்று குரங்குகள் இருக்கும் பொம்மையின் புகைப்படத்தைக் காண்பித்தார். தொடர்ந்து, அதற்கு விளக்கமும் கொடுத்தார்.
 
“நம் எல்லோருக்கும் தெரியும். அந்த மூன்று குரங்குகளில் ஒன்று தன் இரு கண்களை மூடிக்கொண்டும், இரண்டாவது தன் வாயை பொத்திக்கொண்டும், மூன்றாவது தன் இரு காதுகளை பொத்திக்கொண்டும் இருக்கின்றன. அந்த மூன்று குரங்குகள் பொம்மை கெட்டதைப் பார்க்காதே, கெட்டதை பேசாதே, கெட்டதை கேட்காதே என்ற செய்தியை நமக்குக் கூறுவதுபோல் அமைந்துள்ளது.  இந்த பொம்மை, மகாத்மா காந்தியை மிக கவர்ந்தது என்றும் நம் எல்லோருக்கும் தெரியும். அது, ட்வெண்டியத்து சென்சுரி. நாம் இருப்பதோ  ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி. ஆகவே நாம் சற்று மாற்றி யோசிக்க வேண்டும். அடுத்து வரும் படத்தைப் பாருங்கள் என்று கூறி திரும்பவும் மூன்று குரங்குகள்  இருக்கும் பொம்மையின் புகைப்படத்தைக் காண்பித்தார். மேலும் தன் விளக்கத்தையும் சொன்னார்.
இந்த குரங்குகள் சற்று வித்தியாசமாக இருக்கும். முதல் குரங்கு ஒரு மொபைலைக் காதில் வைத்துக்  பேசிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது குரங்கு .காதில் ஒரு ஹெட்போனை வைத்துக் கொண்டு எதையோக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மூன்றாவதோ ஒரு பைநாகுலரை கண்களில் வைத்துக்கொண்டு தூரத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் நல்லதை அல்லது கெட்டதை பேசுவதோ, கேட்பதோ அல்லது பார்ப்பதோ அவர்களுக்கு கிடைத்த சுதந்திரமாக நினைக்கின்றன போன்று தோன்றுகிறதில்லையா? அது போன்று, நம் நாட்டு மக்களிடம் நம்பிக்கை வைத்து நாங்கள் எங்கள் ஆட்சியை மக்களுக்காக அர்ப்பணித்து செயல் பட்டு வருகிறோம். அந்த சிந்திக்கும் சுதந்திரத்தை நம் மக்களுக்கு கொடுத்து விட்டோமென்றால் மிகையாகாது. இதனால் வரும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பாளியாக்கப் படுகிறோம். ஆகவே, மக்கள் நவீன உத்திகளைப் பயன் படுத்துதலில் ஆவல் காட்ட வேண்டும். அதே சமயம், நல்லதையே பார்க்கவும், நல்லதையே பேசவும், நல்லதையே கேட்கவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அவர்களை ஊக்குவித்தார்.
மக்களின் கூட்டம், ஜனாதிபதியின் சொற்பொழிவைக் கேட்டு, பலத்த கரகோஷம் எழுப்பின.
இதைத் தொடர்ந்து, ஒரு தண்ணீர் ஆராய்ச்சியாளர், தன் முயற்சியால் கிடைத்த நன்மைகளை விளக்கினார். ஒரு காணொளி மூலமாக, நதியூருக்கருகில் உள்ள ஒரு கிராமத்தின் அமைப்பைக் காண்பித்து விளக்கம் கொடுத்துக்கொண்டு தன் சொற்பொழிவை ஆற்றிக் கொண்டிருந்தார். அந்த காணொளியில் காண்பிக்கப்பட்ட கிராமம், கருகிராமம், எங்கும் வறண்டு, ஊர் மக்கள் தொலை தூரத்திற்குச் சென்று தண்ணீர் கொண்டு வரும் காட்சியும், விலங்குகள் போதிய தண்ணீர் கிடக்காததினால் ஆரோக்கியம் குன்றியும் காணப்பட்டன. வயல்கள் காய்ந்து வரண்டு கிடந்தன. அந்த கிராமத்தின் பட்த்தைப் பார்க்கும் எவருக்கும் விவசாயம் இந்த கிராமத்தில் நடக்கிறதா என்று ஒரு சந்தேகம் எழும் வகையில் இருந்தது.  நாம்  இன்று இந்த கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களுடன் அளவலாகப் போகிறோம்.    அதில் கலந்து கொள்வதற்கு விருப்பமுள்ளோர் உடனே தங்கள் பெயர்களைக் கொடுங்கள் என்றும் அறிவித்தார்.
உணவு இடைவேளைக்குப் பின், கிராமத்திற்குச் செல்வதற்கு மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளில் கிட்டத்தட்ட 50 பேர்கள் முன் வந்தனர். அவர்கள் ஒரு பேரூந்தில் கிளம்பத் தயாராகினர்நிகழ்வு மேலாளர்கள், அந்தப் பிரிதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் செல்லும் வழியில் உபயோகப்படும் வண்ணம், ஒரு சான்விட்ச் பாக்கெட்டும் ஒரு தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள். அவர்களுடன் அந்த கிராமத்திலுருந்து இரண்டு விவசாய நண்பர்கள் தொடர்ந்து சென்று தங்கள் கிராமத்தைப் பற்றி விளக்கம் தந்து உதவ வந்திருந்தனர். அவர்களுக்கும் ஆளுக்கொரு  தண்ணீர் பாட்டில் விரும்பிக் கொடுத்தார்கள். ஆனால், அமைதியாக அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.  அவர்கள் கிராம விஜயத்தின் போது ஒரு சிறிய குன்றின்மேல் ஏறப் போவதாகவும், பிறகு கிராமத்தின் முற்போக்கு விவசாயிகளுடன் கருத்து பரிமாரல்கள் செய்யவும் ஏற்பாடாகியுள்ளதாகவும் சுருக்கமாகக் கூறினர். 
 
கரு கிராமத்தை ஒரு அரை மணி அளவில் சென்றடைந்தனர்.  பேரூந்திலிருந்து கீழே இறங்கிய பிரிதிநிதிகளுக்கு தாங்கள் வந்திருக்கும் கிராமம் காலையில் காணொளியில் பார்த்த கிராமமா இதுவென்று தோன்றி, ஒருவரையொருவர் மிக ஆச்சரியத்துடன்  பார்த்தனர். 
 
“சார், இது கரு கிராமம் இல்லையே! நாங்கள் செல்ல வேண்டிய கரு கிராமம் செல்வதற்கு இந்த கிராமம் வழியாகச் செல்ல வேண்டுமோ?” என்று பொருள் பொதிந்த வகையில் வினாவினார் ஒரு பிரிதிநிதி. 
 
“இல்லை சார், இதுதான் நீங்கள் பார்க்கவிருக்கும் கரு கிராமம். நீங்கள் இது பார்ப்பதற்கு பச்சைபசேலென எங்கும் செழுமையுடன் இருப்பதைக் கண்டு உங்களுக்கு சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை. அதன் ரகசியம் இன்று உங்களுக்குத் தெரிந்துவிடும்.” என்று கூறிக்கொண்டே அவர்களணைவரையும் கிராமத்தில் இருக்கும் ஒரு மலைக்குன்றினருகில் அழைத்துச் சென்றார் அவர்குடன் வந்த அவ்வூரின் விவசாயி.
 
குன்றின் மேல் ஏறும்போது, அவ்விவசாயப் பிரிதிநிதிகள் தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்குக் காரணம் குறுகிய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் அமல் படுத்தியதால்தான். என்று விளக்கினர். குன்றின் மேலிருந்து அடிவரை தண்ணீரைத் தேக்கிப் பிடிக்கும் வகையில் குழிகளும், தடுப்புகளும் அமைத்து, அதற்கு தகுந்தாற்போல்.மரங்களும் வளர்திருந்தனர். குன்றில் ஏறி இறங்குவதற்குமுன் வந்த மாநாட்டுப் பிரிதிநிதைகளும் தான் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலிருந்த தண்ணீர் முழுவதையும் குடித்துத் தீர்த்து விட்டிருந்தனர். ஆனால், அவர்களுடன் வந்த இரு விவசாய நண்பர்களும் ஒரு மடக்குத் தண்ணீர்கூட குடிக்காமல் விளக்கம் கொடுத்துக்கொண்டே வந்தனர்.   
   
கிராமத்தின் முக்கிய இடங்களிலெல்லாம்  “பிடியுங்கள் ஒவ்வொரு மழைத் துளியையும்” என்று எழுதி மக்களிடம் விழிப்புணர்ச்சியை வளர்த்திருந்தனர். 
 
குன்றிலிருந்து கீழே இறங்கியபின் கிராமத்தின் முற்போக்கு விவசாயிகளிடம் கருத்தாலோசனைக்காக வந்தமர்ந்தனர் மாநாட்டு பிரிதிநிதிகள். 
 
மாநாட்டுப் பிரிதிநிதியொருவர், “அய்யா, உங்கள் கிராம மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒரு பசுமைப் புரட்சியைச் செய்துள்ளீர்கள் என்றால் அது மிகையாகாது. இந்த கிராமத்திற்கு வருவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் பருகுவதற்கு, ஒரு பாட்டில் குடிநீர் கொண்டு வந்தோம். ஆனால், எங்களுடன் வந்த உங்கள் கிராமத்து இரு நண்பர் விவசாயகளும் அதை மறுத்து விட்டார்கள். இங்கு வந்து பார்த்தப் பிறகுதான், எங்களுக்கு அவர்கள் அப்படி மறுத்ததின் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் கிராமை மற்ற கிராமங்களுக்கும் ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு ஒரு சந்தேகமுமில்லை. மிக்க நன்றி,” கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.
   
இப்படியாக, உலக மாநாடு பல பொருள் பதிந்த விஷயங்களை மக்களுக்கு விளக்கும் வண்ணமாக இருந்தது. நல்லதாகவே முடிந்தது என்றும் கூறலாம். மாநாடு முடிந்து வெளி நாட்டு பிரமுகர்கள் எல்லோரும் கிளம்பிச் சென்று விட்டனர்.  தொழு நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.
தொழு நாட்டின் ஜனாதிபதி மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததில் வெளி நாட்டு பிரமுகர்களின் பாராட்டுதல்களைக் கேட்டு மிகவே மகிழ்ந்து போனார். அதைக் கொண்டாடும் வண்ணம் மறு நாள் நாடு தழுவிய விடுமுறையையும் அறிவித்தார்.
***
ஃபிப்ரவரி இரண்டு. இரவு அணுகும் நேரம்.
அன்று இரவு தாக்குதலைத் தொடங்க ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன் ஆணையிட்டிருந்தார்.
செழு நாட்டின் எல்லையில் ராணுவ வீர்ர்கள் மறைந்திருந்து தாக்குதலுக்குத் தயார் நிலையில் இருந்தனர். விமானப்படை வீர்ர்களும் ஆயத்தமாக தங்கள் பகுதியில் காத்திருந்தனர்.
அன்று இரவு நதியூரைக் கைப்பற்ற செழு நாடு தயார் நிலையில் இருந்தது. தொழு நாட்டு மக்களோ வரும் ஆபத்தைப் பற்றி ஒன்றும் அறியாது, மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, களித்திருந்தனர். அவர்களையும் உறக்கம் மெல்லத் தழுவியது.
செழு நாட்டிலும் மக்களும் நடக்கப் போகும் அதிர்ச்சியான நதியூர் முற்றுகையைப் பற்றி ஒன்றும் அறியாது இருந்தனர். 
 
ஆனால், அன்று இரவு, ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன், பாதுகாப்பு அமைச்சர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் சில உயர் அதிகாரிகள் மட்டும் அவரின் அலுவலகத்தில் க்லொஸ்ட் ஸர்க்யுட் டெலிவிஷன்  திரையில் தங்கள் முழு கவனத்தையும் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். 
 
இரவு மெல்ல மெல்ல நதியூரைத் தழுவிக் கொண்டிருந்தது. அன்று முழு நிலவு நாள். ஆனால், நிலவு முழுவதும் வெளி வர முயன்றும், சிறு சிறு மேக கூட்டங்கள் அதை மறைத்துக் கொண்டிருந்தன.  
 
திடீரென்று நதியூரின் அருகில் மின்னல் தாக்கியது போலிருந்தது. வானத்தில் மின்னல் கீற்றுகளாக வெளிச்சத்தை தெளித்துக் கொண்டிருப்பது போலிருந்தது. அதைத் தொடர்ந்து, இடி முழக்கம் போன்ற சப்தங்களும் கேட்டவண்ணம் இருந்தன. அது மின்னல் தாக்குதலா? அது இடி முழக்கமா? ஓன்றும் புரியவில்லை. நதியூர் மக்கள் அதிர்ச்சி கொண்டு தங்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கினார்கள். சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. தொலைவில் கேட்ட இடி முழக்கம் போன்ற சப்தம் மெல்ல மெல்ல அருகே கேட்பது போலிருந்தது. திடீரென்று, இடி முழக்கம் போன்ற சப்தம் நின்று போய்விட்டது. 
 
ஆனால், நில நடுக்கம் வந்தது போன்று ஒரு பிரமை தோன்றி, மக்கள் வெளியே ஓடி வந்தனர். அது உண்மைதான் என்று மனதில் உறைப்பதற்கு சற்று நேரம் பிடித்தது. மிக பெரிய அளவிலும், மிக வீரியமாகவும், சூறாவளிக் காற்று அடிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மிகக் கனமான மழையும் பெய்யத் தொடங்கியது. 
 
இயற்கை தெய்வம் தன் முழு சீற்றத்தையும் சேர்த்து காண்பிப்பதுபோல், நில நடுக்கம், மழை, இடி, சூறாவளியைவிட வலிமையாக காற்று, இவை அனைத்தையும் கலந்து நதியூரை மெல்ல கவ்விக் கொண்டது.    நதியூரின் முக்கிய நதியில் பாதி கடலில் மூழ்கிவிட்டது.
 
ஜனாதிபதி தீர்க்கதர்சன் தன் தலை நகரிலிருந்து நதியூர் மக்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் முயற்சியில் முழுவதாக ஈடு படுத்திக் கொண்டார். தன் அரசின் முழு கவனத்தையும் நிவாரணப் பணியில் திருப்பி விட்டார். 
 
அப்போது, அவருக்கு ஒரு ரகசிய செய்தி வந்தது. அந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார். 
 
“செழு நாடு கட்டி முடித்த நெடுஞ்சாலையின் இருபுறமும், செழு நாட்டு ராணுவ வீரர்களின் ஏராளமான இறந்த உடல்கள் கிடப்பதாகவும். சில ராணுவ வீரர்களின் உடல்கள் நதியூரின் அருகில் வரைக் கிடப்பதாகவும் வந்த செய்திதான்.”  
 
“இது எப்படி சாத்தியமாகும்?” என்று சற்று சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் உள்நாட்டு அமைச்சர் அவரிடம் வந்து, செழு நாட்டின், தீய எண்ணத்துடன் தீட்டியத் திட்ட்த்தைப் பற்றி ஒற்றர்கள் மூலம் தகவல் வந்ததென்றுக் கூறினார். மேலும், செழு நாட்டின் தலைநகரமான கடலூரின் பெரும்பகுதியும், தொழு நாட்டின் நதியூரின் சில பகுதிகளும் இந்த இயற்கையின் விளையாட்டில் திக்கி, கிட்டத்தட்ட கடலில் மூழ்கி விட்டாதாகவும் கூறினார். 
 
தீர்க்கதர்சன், தான் தொழு நாட்டு சூழ்ச்சி வலையில் சிக்கி விட்ட்தை எண்ணி மிகவும் வருந்தினார்.
   
 
****
“அய்யகோ! எல்லாம் போயிற்றே!” எங்கே, என் செழு நாடு. நான் எங்கே இருக்கிறேன்? ஒன்றும் புரியவில்லையே,” வளர்ச்சிவேந்தனின் குரல் தழுதழுத்தது. டெலிவிஷன்  திரை திடீரென்று அணைந்து விட்டது. எங்கும் இருட்டு. வெளியே செல்ல வழி காண்பிக்கக் கூட விளக்கு வெளிச்சம் இல்லை. மொபைலில் உள்ள விளக்கின் வெளிச்சத்தின் உதவி கொண்டு தன் அறையை விட்டு வெளி வர முயன்றார். பயனில்லை.    
அமைச்சர்களும், அதிகாரிகளும் அவருக்கு உதவ முயற்சித்தனர். முயற்சி பயனளிக்க வில்லை.
அன்று இரவு ஒரு பெரிய சுனாமியைப் போல் மும்மடங்கு வேகத்தில் காற்றும் மழையும் அடித்து நாட்டையே கடல் கொண்டு விட்டது போல் இருந்தது. இரவு முழுவதும், எங்கும் அழு குரல்கள்தான் கேட்டன. இனி, நம் நாட்டில்  சூரியன் உதிப்பானா என்று சந்தேகமே வந்து விட்டது செழு நாட்டு மக்களுக்கு. மழை பெய்யவில்லையே என்று ஏங்கியிருந்த காலம் போக, இனி மழையே வேண்டாம் என்று தோன்றும் வண்ணம் இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி எங்கு இருக்கிறோம் என்றுகூட தெரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.  உயிர் சேதமும் பொருள் சேதமும் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு அழிந்து விட்டது செழு நாடு.  
ஜனாதிபதி அலுவலகம் இருந்த மாளிகையை மெல்ல மெல்ல கடல் தண்ணீர் சூழ ஆரம்பித்தது. கடலூர் முழுவதும் கடல் நீர் சூழ்ந்து கொண்டது. காலை விடிவதற்குள், கடலூரின் முக்கியப் பகுதிகளும், ஜனாதிபதியின் அலுவலகமும், அவர் தங்கியிருந்த பெரு மாளிகையும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மெல்ல மெல்ல மழையின் வீரியமும், சூறாவளிக் காற்றின் வேகமும் குறையத் தொடங்கின. ஜனாதிபதி வளர்ச்சிவேந்தனும் அவர் அமைச்சர்களும் மற்றும் அவருடன் இருந்த உயர் அதிகாரிகள் பலரும் கடலில் மூழ்கி விட்டனர்.
சூரியனும் மெல்ல வெளியே வர முயற்சி செய்வதுபோல் இருந்தது.  மக்கள் கடலை நோக்கி பார்த்தார்கள். இயற்கையின் சீற்றத்தின் சாபம் போல் செழு நாடு துண்டு துண்டாக ஆகி விட்டது. எங்கு பார்த்தாலும் கீழே சாய்ந்த பெரிய பெரிய கட்டடங்களும், மனிதர் மற்றும் விலங்குகளின் இறந்த உடல்களும்தான்.  அப்பப்பா! பார்ப்பதற்கே திராணியில்லாமல் இயற்கையின் சீற்றத்தின் விளைவுகளைத்தான் பார்க்க முடிந்தது. செழு நாடு எங்கே? அப்படி ஒரு நாடு இருந்ததா என்ற சந்தேகம் வரும் நிலையில் உருக்குலைந்து தெரிந்தது.

***
இடம்: தேவலோகம்.
முதற் கடவுள் இயற்கைக் கடவுளை உடனே வருமாறு விளித்தார்.
இயற்கைக் கடவுள் வந்தார். முதற் கடவுள் அவர் முன் செழு நாடு மற்றும் தொழு நாட்டிற்கு ஏற்பட்ட அழிவிற்கு காரணத்தைக் கேட்டார்.
இயற்கைக் கடவுளுக்கு, முதற் கடவுள் தன்னை அழைத்ததின் நோக்கத்தைக் கேட்டு சற்று நகையுடன் கூடிய சிரிப்பு வந்தது.
“காரணம் சொல்கிறேன். நான் அழிக்கும் கடவுள் இல்லை. நான் வரப்பிரசாதமான தண்ணீரை நல்ல விதமாக எல்லோருக்கும் பயன் படும் எண்ணத்தோடுதான்  இரு நாடுகளுக்கும் உபயோகப்படும் வகையில் பரிசாகக் கொடுத்தேன். ஆனால் நடந்தது என்னவென்று தங்களுக்கே தெரியும். இந்த மிக உயர்ந்த பரிசின் மதிப்பை அறியாது, மற்ற எவரொருவரும் உபயோகிக்கக் கூடாதென்று, தன் வசமே வைத்துக் கொள்ளும் பேராசைக்காரர்களாகி விட்டார்கள்.  இரு நாடுகளும், தன் சுய நலம் கருதி  கண் மூடித்தனமாக இயற்கை கொடுத்த பரிசான உயிருக்கும் உயிரான தண்ணீரை எல்லா மக்களின் நலனுக்காகவும் பயன் படுத்தத் தவறி விட்டார்கள். இந்த உயிர் கொடுக்கும் குடி நீரை தன் வசப்படுத்திக் கொள்ள என்னவென்ன  யுக்திகளைக் கையாண்டார்கள். ஒரு கூட்டம் வஞ்சம் மற்றும் வக்கிரமான எண்ணத்துடன் தன் அண்டை நாட்டில் ஓடும் நதியையே தன் வசப்படுத்திக் கொள்வதில் கவனமாக இருந்தனர். மற்றொரு கூட்டமும் அதே நதியை தன் வசத்திலேயே இருத்திக் கொள்ள எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து செய்த வண்ணமிருந்தனர். முடிவில், நான் கொடுத்த பரிசு குரங்குகளின் கைகளில் கொடுத்த பூமாலையைப் போல் அழிந்து போய் விட்டது, ஆகவேதான்,  நான் கொடுத்த பரிசான நதியூரின் முக்கிய நதியின் பெரும் பகுதியை என்னுடன் திரும்ப எடுத்துச் சென்று விட்டேன்.” ஒரே மூச்சில் இயற்கை கடவுள் தன் விளக்கத்தைக் கூறி முடித்தார்.
“அழிவு வேலைகளை விட ஆக்க வேலைகளுக்கு இயற்கையின் வரப்பிரசாதங்களைப் பயன் படுத்த வேண்டும் என்ற நல்ல விளக்கம் தந்தீர்கள்,” என்று கூறினார் முதல் கடவுள்.