Wednesday 13 February 2019

மாடர்ன் மார்க்கண்டேயன்






வாழ்க்கை-நோய்- ஒன்று ஒன்றாய் வேதனைகள், உடல் தளர்ச்சி, படுக்கையில் ஒரு வருடமோ, இரண்டு அல்லது மேலும் எவ்வளவு வருடங்கள் படுத்த படுக்கையிலேயே வாழ வேண்டுமோ? பதில் கிடைக்காமல் இது போன்று பலர்.
நான் அந்த பலரில் ஒருவனாகி விடுவேனோ? என் மனம் அசை போடுகிறது.
நானும் 70 வயதில் ‘கான்ஸரை’ நண்பனாக்கிக் கொன்டேன்; இல்லை அது என் நண்பனாகி  விட்டதோ? புரியவில்லை. மருத்துவமனை, மருத்துவர், மருந்து என்ற ‘ம’ ‘ம’ மந்திரங்கள் என் வாழ்க்கையில் தொடர்ந்தன.
ஆனால், ஆச்சரியமாக விரைவில் உடம்பில் தேர்ச்சி, புதிய பலம், இளமை திரும்பி விட்டதோ என்ற எண்ணம் தோன்ற தொடங்கியது. நடையில் நிதானம், தானே எல்லா முக்கிய தேவைகளை (குளிப்பது, சுத்தம் செய்து கொள்ளுதல் முதலானவைகள்) செய்து கொள்ளுதல் மிக எளிதாக இருந்தன.
நீச்சல் எனக்கு பிரியமான பொழுது போக்கு. சென்றால் ஒரு மணி நேரம். மூன்று மாதங்களில் நீச்சல் குளத்தில் இறங்கினேன். ஆசை தீர நீச்சல் குளத்தில் குளித்தேன். நீந்தினேன். வீட்டில் எதிர்ப்பு. பிறர் கண் பட்டு விடும், இவ்வளவு விரைவில் குணமாகிவிட்டதே என்று நினைப்பார்களாம்! எனக்கு சிரிப்பு வந்தது.
நாட்கள் உருண்டன. தினமும் முன்னேற்றம், இத்தனை விரைவிலா?
காலனியில் தெரிந்தவர்கள் கூறுவது காதில் விழுகிறது.. ஒரு புன்னகையுடன் நடக்கிறேன். பெருமிதம் என்றும் சொல்லலாம்.
தினம் ஒரு புராணக் கதை, ப்ளாக்( )எழுதுவது, பகவத் கீதா படிப்பது, வெளியில் நடந்து செல்லுதல் என்று ஒவ்வொரு நாளும் அமைதியாக சென்றது. முந்தைய நாள் கஜேந்திர மோக்ஷ்ம்; இன்று மார்கண்டேயன் புராணம் படித்து முடித்தேன். கண்களின் ஓரங்களில் கண்ணீர் வழிகிறது.
மனைவி காலை உணவாக கஞ்சி கோப்பையை அன்புடம் தருகிறாள். அவள் முகத்தில் தான் எவ்வளவு கவலை? அழகு என்பதற்கு உதாரணம் என்றால் அவளைக் கூறலாம். இன்று முதிர்ச்சி தெரிகிறது. ஆனால், ஆழ்ந்த நம்பிக்கை என் உடல் சரியாகி விடும் என்று.
கஞ்சியை குடித்து முடிக்கிறேன். காலி கோப்பையை அவளிடம் கொடுக்கிறேன். அப்படியே அவள் தோளில் சாய்ந்து விடுகிறேன். அவளுக்கு சற்று அதிர்ச்சி. எங்கள் பெண்ணை கூப்பிடுகிறாள்.
என்னில் ஒரு உணர்வு. மார்க்கண்டேயன் கதையை படித்து விட்டு நானும்  மார்க்கண்டேயன் மோக்ஷ்ம் அடைந்து விட்டேனோவென்று! உடலில் ஒரு அசைவுமில்லை. அவர்களுக்குத் தெரிய சிறிது நேரம் பிடிக்கிறது. வேகமாக வந்த ‘கான்ஸ்ர்’ எங்கும் பரவாமல் வேகமாக குணமடைந்து விட்ட காரணம்  வேகமாக மேலுலகம் செல்லத்தானோ! இனி யாரைப் பற்றி கவலை. நான் இறந்து விட்டேன் என்று எல்லோரும் நினைத்தனர்.
சிவ பெருமான் மார்கண்டேயனை காப்பாற்றியதுபோல், எனக்கு பாக்கியம் இல்லையோ! ஆனால், என் மனைவி மனம் தளரவில்லை. ஆம்புலன்ஸ் தருவிக்கப் பட்டது. மீண்டும் மூன்று ‘ம’ க்கள்  “மருத்துவமனை, மருந்து, மருத்துவர் முயற்சி.
பிரசவத்திற்கு ஆவலுடன் ஆபரேஷன் அறையின் முன்னால் காத்திருக்கும் குடும்பம் போல், என் உறவினர்களும்,  சில நண்பர்களும் காத்திருந்தனர். சற்று நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார். முகத்தில் ஒர் புன்னகை தெரிந்தது. அதை பார்த்து எல்லோருக்கும் ஒரு பெரு மூச்சு. அதில் எவ்வளவு நிம்மதி. ‘அவர் பிழைத்து விட்டார். இனி கவலை இல்லை.’
மருத்துவர் சிவபெருமான் உருவில் வந்து என் மனைவியின் வைராக்கியத்தை மதித்து மார்க்கண்டேயனை காப்பாற்றியது போல் இருந்தது.                                                                                                                                 
எஸ். சந்தானம் (கொமச்சா)    
பூனே
13 பிப்ரவரி 2019                                                                                                                                                                                                                            





3 comments:

  1. I could sense that you have endured the tough phase, with grit and determination to jump start again. More than that your wife has been a pillar of support with determination to provide timely medicare. She deserves appreciation for her presence of mind. Even she can be called Lord Siva....

    ReplyDelete
  2. வாழ்க்கை என்பதே நம்பிக்கையில் உள்ளது. நம் நம்பிக்கைத்தான் மனிதனுக்கு வாழ வேண்டும் என்ற உணர்வை கொடுக்கிறது. மனிதனுடைய வாழ்வோ சாவோ அவன் கையில். கடவுளால் கொடுக்கப்பட்ட சரிரத்தை வியாதியின்றி பேணுவது மட்டும் தான் மனிதனால் முடியும். நல்ல சிந்தனை நல்லோழுக்கம் உயர்ந்த எண்ணம் முதலியவையே நல்ல முடிவினைத்தரும். மார்கண்டேயனின் நம்பிக்கை தான் எமனிடமிருந்து இறைவனால் காக்கப்பட்டான். நம்பிக்கைத்தான் வாழ்வின் ஒளி விளக்கு.

    ReplyDelete
    Replies
    1. Sir, you will always be a winner by the sheer weight of your grit, determination, intellect and goodliness , powered perhaps by the Godliness in you. You have been a role model for juniors with humble beginnings like me from Kumbakonam. I am sure that, by God's Grace, and your never-say-die spirit, you will continue to guide us and be a banyan tree to us. My best wishes to the Made For Each Other couple. My regards and namaskarams to you both. Regards. Balu

      Delete